Friday, April 27, 2018

பிரித்தானிய குட்டி இளவரசருக்கு ஏன் இந்த பெயர்?


இளவரசர் வில்லியம் தம்பதியினரின் மூன்றாவது குழந்தையான குட்டி இளவரசருக்கு Louis Arthur Charles என பெயர் சூட்ட இருப்பதாக அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் குட்டி இளவரசர் முடியாட்சிக்கு காத்திருக்கும் வரிசையில் ஐந்தாவதாக உள்ளார்.
Louis
குட்டி இளவரசரின் முதல் பெயரான லூயிஸ் என்பது இளவரசர் பிலிப்பின் உறவினரும் இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராயான Lord Louis Mountbatten என்பவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் குட்டி இளவரசருக்கு சூட்டப்பட உள்ளது.
1979 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் Louis Mountbatten அயர்லாந்து புரட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
Arthur
ஆர்தர் என்பது இளவரசர் வில்லியமின் இரண்டாவது பெயராகும். மட்டுமின்றி ஜேர்மானிய பூர்வகுடி படையெடுப்பாளர்களிடம் எதிர்த்து போராடிய பிரித்தானிய மாவீரனும் உலகப்புகழ்பெற்ற அரசருமான ஆர்தர் என்பவரை நினைவு கூறும் வகையில் சூட்டப்பட்டுள்ளது.
Charles
சார்லஸ் என்பது குட்டி இளவரசரின் தாத்தாவும் இளவரசர் வில்லியமின் தந்தையின் பெயருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சூட்டப்பட்டுள்ளது.

1917 ஆம் ஆண்டு முதல் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இளவரசர் என்ற பட்டம் சூட்டுவதை மட்டுப்படுத்தப்படும் என உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அந்த உத்தரவை இரண்டாம் எலிசபெத் ராணியார் ரத்து செய்ததுடன், குடும்பத்தில் மூத்த மகனின் பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டம் தரலாம் எனவும் உத்தரவிட்டார்.
இந்த சிறப்பு உத்தரவால் இளவரசர் வில்லியமின் குழந்தைகள் இளவரசர் எனவும் இளவரசி எனவும் அறியப்படுவார்கள்.
அந்த வரிசையில் பிரித்தானியாவின் குட்டி இளவரசர் அதிகாரபூர்வமாக His Royal Highness Prince Louis of Cambridge என்றே அழைக்கப்படுவார்.

REUTERS
DAILY MIRROR

http://news.lankasri.com/uk/03/177454?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment