Tuesday, April 24, 2018

பிரபாகரன் இறந்து விட்டாரா? அம்பலமாகும் உண்மைகள்!!


பிரபாகரன் இறந்து விட்டதாக நினைத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை தமிழர்களின் தலைவராக முன்னிறுத்திச் செயற்பட்டு வருவதாக ம.தி.மு.க.வின் தலைவர் வை.கோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘அண்மைக்காலங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்து வரும் கருத்துக்கள் உலகத் தமிழர்களை வேதனையடையச் செய்துள்ளன.தன்னையொரு தமிழர்களின் தலைவராக அதாவது தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக நினைத்துப் பார்த்து மேடைகளில் உரையாற்றியும், குறிப்பாக உலகத் தமிழர்களிடமும் தொடர்புகளைப் பேணி வருகின்றார்.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களிடம் வீர வசனங்களையும் ஆவேசப் பேச்சுக்களையும் பேசி அவர்களிடமிருந்து நிதி உள்ளிட்ட பலவற்றைப் பெற்று உலகத் தமிழர்களை ஏமாற்றி வருகின்றார். இவை அனைத்தும் தன்னை ஒரு தமிழர்களின் தலைவராக அதாவது உலகத் தலைவர்களின் தலைவராக நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயற்பாடுகளாகும்.
அதாவது தலைவர் பிரபாகரனுடன் இணைந்து எடுத்ததாக கூறி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு தமிழ் மக்களிடம் குறிப்பாக புலம் பெயர் தமிழர்களிடம் ஆதரவினைத் தேட முயல்கின்றார். ஆனால் அவ்வாறான ஒரு புகைப்படம் எடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற எண்ணப்பாட்டில் தான்தோன்றித்தனமானச் செயற்படும் நிலைப்பாடாகும். ஆனால் உண்மை என்ன என்று எமக்குத் தெரியும்.
பிரபாகரன் இனிமேல் வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டு தமிழீழத்தின் தேசியக் கொடியான புலிக்கொடியினை ஒத்ததாகத் தனது கட்சிக் கொடியினை அமைத்தும் செயற்பட்டு வருகின்றார். இதன் உச்சக்கட்டமாக அவர் நான் பிரபாகரனின் இடத்தில் இருந்திருந்தால் எப்போதோ ஈழம் அமைத்திருப்பேன் எனவும் மேடைகளில் முழங்கி வந்திருக்கின்றார்’ என வைகோ மேலும் குறிப்பிட்டார்.
எனினும், இந்திய அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல்செய்வது ஒன்றும் புதிதல்ல என்பதும், தேர்தல் காலங்களில் மட்டும் அவற்றினைப் பெரிதுபடுத்துவதும் வழமையான விடயம் என இந்த வாரம் தமிழகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


http://www.canadamirror.com/india/04/170013?ref=ls_d_canadamirror

No comments:

Post a Comment