Friday, April 6, 2018

புலிகளின் தலைவர் - சீமான் தொடர்பில் வெளியான யாரும் அறியா முக்கிய தகவல்!!


திரைப்பட இயக்குநரும்,ஈழப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளருமான சீமான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உண்மையானவையென ஈழத்தின் இறுதி யுத்தம் வரை பங்கெடுத்த ஊடகவியலாளர் சிவகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் சீமான் புகைப்படங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஒரு ஈழத்தமிழனாக இந்த விடயங்களை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.
ஏனெனில் நாங்கள் ஈழத்தில் நாள் தோறும் செத்துக்கொண்டிருந்த போது எங்களுக்காக கண்ணீர் சிந்திய எங்கள் உறவுகள் இன்று நான் பெரிதா? நீ பெரிதா? என்று போட்டி போட்டுக்கொண்டிருக்க நம் எல்லோருக்கும் பொதுவான எதிரி எம்மை அழிக்க வேறு வகையில் திட்டமிடுவதை மறந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதிரியின் பாதையை இலகுவாக்கிவிட்டு எமக்குள் நாம் அடிபடுகின்றோம். இது கூட எதிரியின் சூழ்ச்சியாகவோ இருக்கக்கூடும். அப்படி இருக்குமாயின் நாம் அனைவரு்ம் இந்த சந்தர்ப்பத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என என் தாய்த்தமிழக உறவுகளிடம் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சரி இனி சீமான் அவர்களின் புகைப்படம் பற்றி வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் எனது கருத்தை முன்வைக்கிறேன்.
சீமான் தாயகம் வந்திருந்த போது கிளிநொச்சியில் நான் அவரை சந்தித்து பல மணி நேரம் பேசியிருக்கிறேன். தமிழீழ தேசியத் தொலைக்காட்சிக்காக சீமான் அவர்களை மூன்று மணி நேரம் செவ்வி கண்டிருந்தேன். அப்போது எனக்கு அருகில் இருந்த பலர் இப்போதும் சாட்சிகளாக இருக்கின்றனர்.
இதை ஏன் நான் இங்கு பதிவு செய்கின்றேன் எனில் சில சம்பவங்களை தெரியத பலர் முகப்புத்தகத்தில் கருத்துச்சொல்வதும் சில வறலாறுகளை தமக்கு சார்பானதாகவும் மாற்ற முயற்சிக்கின்றமையே ஆகும்.
அந்த வகையில் திரு.சீமான் அவர்கள் வன்னிக்கு வந்ததும்,அவர் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும்,வன்னியில் போராளிகள்,தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியதும்,வன்னியில் பல இடங்களை சுற்றிப்பார்த்தவர் என்பதும் முற்றிலும் உண்மையே.
நேரடி கண்கண்ட சாட்சியாக நான் உற்பட இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உயிருடன் வாழ்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
சீமான் செய்து கொண்டிருக்கும் அரசியல் பிடிக்காதவர்கள் வரலாற்றின் மீது கை வைப்பதாகவே எனக்குப்படுகிறது. சீமானின் அரசிலை அவரது கருத்துக்களால் எதிர்கொள்ளுங்கள்.
ஆனால் வரலாற்றை மாற்ற முற்படாதீர்கள் எனவும் அவர் கோரியுள்ளார்.


http://www.jvpnews.com/srilanka/04/167944?ref=ls_d_jvp

No comments:

Post a Comment