Wednesday, April 18, 2018

ஜேர்மனியில் நாய்க்கு மரண தண்டனை!


ஜேர்மனியில் தன்னை வளர்த்த இருவரையுமே வெறிக்கொண்டு தாக்கிக் கொன்ற வழக்கில் CHIKO எனும் நாய்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் போர்க்குணம் உள்ள நாய் வகைகள் சில சமயம், அதன் உரிமையாளரையோ பாதுகாப்பவரையோ தாக்கி விடுகிற சம்பவம் அதிகமாகவே நடைபெற்றுள்ளது.
கடந்த வாரத்தில் கூட இதே Staffordshire Terrier ரக நாய் ஒன்று தனது உரிமையாளரின் 7 மதக் குழந்தையைக் கடித்துக் குதறி கொன்றது நினைவிருக்கலாம்.
இந்த மாதத்தின் முற்பகுதியில் தனது உரிமையாளரையும் (52 வயதுப் பெண்மணி) அவரது மகனையும் CHIKO என்ற கலப்பின டெரியர் ரக நாய் ஒன்று திடீரென வெறிபிடித்து தாக்கிக் கொன்றுள்ளது.
அந்தப் பெண்மணியின் மகள் ஜன்னல் வழியாக தன் சகோதரனின் இறந்த உடலைப் பார்த்தவுடன் பதறிப்போய் தீயணைப்புத் துறையினரை அழைத்திருக்கிறார்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டை உடைத்து அவ்விருவரின் உடலையும் கைப்பற்றினர், மேலும் அந்த வேட்டை நாயை விசாரணை முடியும் வரை காவலில் வைத்தனர்.
இருவரின் பிரேதப் பரிசோதனையில் நாய் கடிபட்டு இருந்தது உறுதியானது, இந்நிலையில் வளர்த்தவர்களையே கொன்ற இந்நாய்க்கு மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுபற்றி Hanover நகரின் செய்தித் தொடர்பாளர் யூடோ மல்லர் கூறுகையில், மரண தண்டனை மட்டும் தான் நாயின் ஆக்ரோஷத்திற்கான ஒரே தீர்வாக இருக்க முடியும் என்றும், மேலும் காவலில் இருந்த போது நாய் யாரோடும் ஒத்துழைக்காமல் ஆக்ரோஷத்துடன் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், நாய்க்கு ஆதரவாகவும் இதுவரை 2,90,0000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

நாயின் மரணதண்டனையை எதிர்க்கும் இவர்கள் அதற்குப் பதிலாக தனிப்பட்ட மருத்துவரிடம் CHIKO-வை ஒப்படைக்கக்கோருகின்றனர்.
சமீபமாகத் தொடரும் இது போன்ற மரணங்களால் கெனைன் டெரியர் ரக நாய்கள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு முதல் Lower Saxony-ல் வேட்டை நாய்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/germany/03/176663?ref=ls_d_germany

No comments:

Post a Comment