Friday, March 23, 2018

போர்க்களமாக மாறிய பிரான்ஸ்...முற்றிலுமாக முடங்கிய மக்களின் வாழ்க்கை


பிரான்ஸ் அதிபரின் தொழிலாளர் சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிபருக்கு எதிராகப் பல போராட்டங்கள் வெடித்துள்ளன.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாட்டில் பல புதிய சட்ட சீர்திருத்தங்களை முன்னெடுத்து வந்தார். அந்த வகையில், தொழிலாளர்களை நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு சேர்ப்பதையும், நிறுவனத்திலிருந்து நீக்குவதையும் எளிமைப்படுத்தும் விதமாக புதிய தொழிலாளச் சட்ட சீர்திருத்தத்தை அதிபர் மேக்ரான் அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டம் அறிமுகமான நாளிலிருந்தே பல்வேறு தரப்புகளிலிருந்தும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபரின் புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் இடதுசாரிக் கட்சியினர் தொடர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன.
இதையடுத்து, நேற்று பிரான்சில் பாரீஸ் நகரத்தில் இடதுசாரிகள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணியை நடத்தி அதிபர் மேக்ரானின் தொழிலாளர் சட்ட சீர்திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால் அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
தன்னை இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் பொதுவானவன் எனக் கூறும் அதிபர் மேக்ரான் தனது புதிய சட்ட சீர்திருத்த முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

http://www.canadamirror.com/france/04/166047?ref=ls_d_special

No comments:

Post a Comment