Friday, December 15, 2017

கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தால் சர்ச்சை

இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இல்லாத உலக உருண்டை, கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் காஸ்ட்கோ எனப்படும் பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உள்ளது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இது, 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன் கிளைகள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், தைவான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.
இந்நிலையில், கனடாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் சில்லரை விற்பனை நிலையத்தில், உலக உருண்டை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல் வரைபடம் சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த உலக உருண்டையில் ‘Made in China' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பார்க்கும் போது, காஷ்மீர் பகுதி ஒரு தனி நாடு போல உள்ளது. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி போலவும் உள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் மீது கனடாவில் வாழும் இந்தியர்கள் சார்பில் வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த உலக உருண்டையின் புகைப்படம் குறித்து டுவிட்டரில் இந்தியர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

http://news.lankasri.com/canada/03/167563

No comments:

Post a Comment