Monday, December 18, 2017

உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன் !


20 ஆவது சர்வதேச சித்திரப் போட்டியில் இவ்வாண்டு 5 வயது தொடக்கம் 7 வயதுப்பிரிவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
ஜெனிவாவை தளமாகக் கொண்ட சர்வதேச சமாதான ஆதாரங்களுக்கான அமைப்பானது வருடாந்தம் உலகளாவிய ரீதியில் நடாத்தி வருகிறது.
இவ்வாண்டு ' பூமியில் சமாதானம் நிலவும்' எனும் தலைப்பில் சித்திரப் போட்டி நடைபெற்றது. இதில் 5 வயது தொடக்கம் 7 வயதுப்பிரிவில் முதலாவது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வன் நகுலேஸ்வரன் கேமலக்ஷன் எனும் மாணவனே முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்கான சித்திரங்களுக்குள் இவரது சித்திரம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளமை இலங்கைக்கும் குறிப்பாக மட்டக்களப்புக்கும் பெருமையை தேடித் தந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய செல்வி ந. சஞ்சனா- கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம், செல்வி ச.தம்மிக்கா -கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம், செல்வி ந. தருணிக்ஷ – புனித சிசிலியா பெண்கள் பாடசாலை, செல்வி சி.சஷ்ஷினி ஆகிய நான்கு மாணவியருக்கு பங்குபற்றுதலுக்கான சான்றிதழ்களும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



http://www.tamilwin.com/special/01/168362

No comments:

Post a Comment