Thursday, December 7, 2017

அகதிகளை நாடு கடத்த எதிர்ப்பு! விமானிகள் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு


ஜேர்மனியில் இருந்து அகதிகளை சொந்த நாட்டுக்கு அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமானிகள் போராட்டத்தில் குதித்ததால் 200-கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இருந்து அகதிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் பணியை மெர்க்கல் அரசு படிப்படியாக துவங்கியுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு கலவரம் ஓயவில்லை என்பதை காரணம் காட்டி, அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என கோரிக்கை வலுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் விமானிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக 222 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 85 விமானங்கள் லுஃப்தான்ஸா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமானது எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெர்க்கல் அரசின் புதிய கொள்கையால் 2015 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் ஜேர்மனியில் அகதிகளாக நுழைந்துள்ளனர். இதில் மூன்றில் ஒருபகுதி மக்கள் எஞ்சிய ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியிருந்து பின்னர் ஜேர்மனியில் நுழைந்தவர்களாகும்.
மட்டுமின்றி இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ஜேர்மன் அரசு சுமார் 388,000 பேரை அகதிகளாக ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/germany/03/166797

No comments:

Post a Comment