Friday, December 1, 2017

கணினியின் வெப்கேமை, சிசிடிவி கமெராவாக மாற்றுவது எப்படி?

கணினி உள்ள வெப்கேமராவை எளிதாக சிசிடிவி கமெராகவாக மாற்ற முடியும். இணையத்திலுள்ள பல்வேறுபட்ட செயலிகள் உள்ளது அவற்றைக் கொண்டு வெப்கேமராவை மிக இலகுவாக மாற்றியமைக்க முடியும்.
நேரடி சிசிடிவி வீடியோக்களை பார்க்க உதவி செய்கிறது இந்த வெப்கமெரா.
படிமுறை 1
முதலில் Yawcam பதிவிறக்கம் செய்ய வேண்டும், Yawcam என்பது ஒரு இலவச ஜாவா வெப்கேம் பயன்பாடாகும்.
படிமுறை 2
பின்னர் Yawcam-ஐ இன்ஸ்டால் செய்த பின்னர், வேப்கேம் இயக்க கணினியில் டிரைவர்களை தேர்வுசெய்து அவற்றை இயக்க வேண்டும். பின்பு வேப்கேம் சரியாக பொருத்தியிருக்கிறதா என்பதை பார்க்கவும்.
படிமுறை 3
அடுத்து Yawcam-ஆப் பயன்பாட்டில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் கேமராவைத் தேர்வுசெய்யவும். அதன் பின்பு வீடியோவிற்கென தனி பீரிவியு திரையை காண முடியும்.
படிமுறை 4
பின்னர் வெப்கேமராவில் உள்ள மெனுவில் கிளிக் செய்து மோஷன் கண்டறிதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வாறு செய்யும்போது உங்கள் கேமராவில் உள்ள மோஷன்களை காணமுடியும்.
படிமுறை 5
அதன்பின்பு வெப்கேமராவில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து Action tab-இல் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கைகள் மூலம் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்காணிக்க முடியும்.

http://news.lankasri.com/othertech/03/166503

No comments:

Post a Comment