Monday, December 11, 2017

ஐரோப்பாவில் மிகவும் ஏழ்மையான நாடு எது தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் உக்ரைன் மிகவும் ஏழ்மையான நாடாக உள்ளது என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டில் சராசரி மாத வருவாய் என்பது வெறும் 190 யூரோ என தெரிய வந்துள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் வரிகள் தவிர்த்து சராசரி மாத வருவாய் 5,000 டொலராக உள்ளது.

கடந்த நவம்பரில் ரஷ்யா உக்ரைனுடனான தனது எல்லையை மூடியதுடன் ஆண்டுக்கு சுமார் 15 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவதாக உக்ரைன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது உக்ரைன் நாட்டின் மொத்த வருவாயில் 5-ல் ஒருபகுதியாகும். உக்ரைனின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தித் திறன் 93 பில்லியன் டொலர் ஆகும். ஆனால் 2013 வரை உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் என்பது 183 பில்லியன் டொலராக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான தடையற்ற வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில், உக்ரைனுக்கு இது பேரிடியாக அமைந்தது.


மட்டுமின்றி இந்த ஆண்டு தொடங்கி இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவையும் ரத்தானதால் உக்ரைன் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/othercountries/03/167261?ref=home-top-popular

No comments:

Post a Comment