Thursday, December 21, 2017

மூலநோயை போக்கும் காய்: சாப்பிடும் முறை!

மலையடிவாரங்கள் மற்றும் அடர்ந்த காடுகளில் பரவலாக வளரும் தன்மையுடைய தான்றிக்காய் மரத்தின் இலைகள், காய்கள், மரப்பட்டைகள் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
கடுக்காயை போல, தான்றிக்காயையும் அதன் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, மேல் தோலை மட்டுமே, மருந்துகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
தான்றிக்காயை எப்படி சாப்பிட வேண்டும்?
தான்றிக்காய் கலந்த திரிபலா சூரணத்துடன், பிரண்டைத் தண்டு, நாயுருவி இலைகள், பொடுதலை, துத்தி, அம்மான் பச்சரிசி மற்றும் அத்தி மர இலைகள்,
ஆகியவற்றுடன் ஆவாரம் பூக்கள் சேர்த்து உலர்த்தி, நன்கு தூளாக்கிக் கொண்டு, அதில் சிறிதளவு தூளை எடுத்து, தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து அல்லது சாதாரணமாக சாப்பிட்டு வர வேண்டும்.
இதுபோல, தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, அனைத்து வகை மூலநோய்கள் மற்றும் ஆசனவாய் அரிப்பு, வீக்கம் போன்ற மூலநோயின் பாதிப்புகள் குணமாகும்.
இதர நன்மைகள்
  • தான்றிக்காய் இலைக்கொழுந்தின் சாறெடுத்து, அதை தினமும் பருகி வர, மூச்சு வாங்குதல் மற்றும் தொண்டைக்கட்டிக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் நீங்கும்.
  • வறுத்துத் தூளாக்கிய தான்றிக்காய் சூரணத்தை, சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் போட்டு அதனுடன் சிறிது தேனை கலந்து தினமும் இருவேளை பருகி வர, ரத்த மூலம் மற்றும் இதர மூல பாதிப்புகள் குணமாகும்.
  • தான்றிக்காய் சூரணம் மற்றும் தேற்றான்கொட்டை சூரணம் ஆகிய இரண்டையும் ஒரே அளவில் எடுத்து அதில் தினமும் இருவேளை தேனில் குழைத்து சாப்பிட்டு வர உள் மற்றும் வெளி மூலம் குணமாகும்.
  • தான்றிக்காய் கலந்த திரிபலா சூரணத்தை தினமும் காலையில் நீரில் கலந்து பருகி வர, உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும்.
  • தான்றிக்காய், திப்பிலி, அதிமதுரம், போன்றவற்றை உலர்த்தி தூளாக்கி அதில் சிறிதளவு எடுத்து 2 டம்ளர் நீரில் கலந்து காய்ச்சி, அந்த நீரை தினமும் இரு வேளை பருகி வர, ஆஸ்துமா மூச்சிறைப்பு பாதிப்புகள் சரியாகியாகும்.
  • தான்றிக்காய் சூரணத்தை, சிறிது பனங்கற்கண்டுடன் சேர்த்து, அதை தினமும் இருவேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல், உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி, வயிற்று பாதிப்பு, மற்றும் பேதி போன்ற நோய்கள் குணமாகும்.
  • தான்றிக்காயை வறுத்து தூளாக்கி அல்லது தான்றிக்காய், கிராம்பு, இலவங்கப் பட்டை இவற்றை உலர்த்தி, நன்கு தூளாக்கி, அதை கொண்டு பற்களை துலக்கி வர, பல்வலி, கூச்சம் போன்ற பிரச்சனைகள் விலகும்.
  • தான்றிக்காய் சூரணத்தை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் கலந்து தொடர்ந்து ஒரு மாதம் தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்துப் பருகி வர, கண் பார்வை தெளிவாகும்.
  • தான்றிக்காய் தோலை, நன்கு தூளாக அரைத்து, நீரில் குழைத்து, அதை காயங்களின் மீது தடவி வர, காயங்கள் விரைவில் ஆறும்.

No comments:

Post a Comment