Wednesday, December 27, 2017

குழந்தைகளிடம் அதீத அக்கறையுடைய பெற்றோரா நீங்கள்? அதுவே எதிர்காலத்தை பாதிக்குமாம்..

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக அளவில் பாசமும் அக்கரையும் காட்டுவார்கள். ஆனால் அது நல்லது கிடையாதாம். நீங்கள் கொடுக்கும் பாசம் அதுவே குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி அவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் அனைத்து செயல்களையும் கவனித்து, அதற்கு அறிவுரைகளும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளும் சொல்வார்கள். ஆனால் வயதுக்கும் மேல்
வளர்ந்தபின், பிள்ளைகள் செய்யும் வேலைகளை கவனித்துப் பார்த்து பின் கருத்துகளை சொல்லுங்கள். அவர்கள் ஒரு செயலை தொடங்கும் போதே குறுக்கிடவோ, முன்முடிவுகளை சொல்ல வேண்டாம்.
அப்படி நடந்தால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் மனவலியை தரக்கூடியதாக அமையும். அதைவிட்டு வெளியே செல்ல அவர்களால் முடியாமல போகும். பெரும்பாலும் தாய்மார்கள் தான் இந்த தவறுகளை செய்கிறார்கள். ஏனென்றால் பிள்ளைகளுடம் அதிக நேரம் அவர்கள் தான் செலவிடுகிறார்கள். அப்படி செய்வது பெற்றோரின் கருத்துக்களை அவமதிக்கும் செயல் என்றும் கருதுகிறார்கள்.
அதனால் பிள்ளைகளின் விருப்பங்களும், தான் யோசிக்கும் திறன் மீது சந்தேகம், முடிவெடுக்கும் திறனும் குறைந்து விடுகிறது. இவ்வாறு இருந்தால் பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு மனதளவில் பிரிவையும் விலகி இருக்கும் எண்ணமும் வந்துவிடும். பிள்ளைகளுக்கு தானாக உங்கள் மீதும் நீங்கள் வாழும் வாழ்க்கையை பற்றிய நம்பிக்கை கொண்டு இருந்தால் அவர்கள் உங்களை பின்பற்றுவார்கள்.
ஆனால் அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் அதிகமாக உள்ளே நுழைவதும் தேவையில்லாமல் முடிவெடுப்பதில் அக்கரை என்று நினைத்து உங்கள் மீது வெறுப்பு வர வைக்கும் செயலை செய்ய வேண்டாமே.... யோசித்து செயல்படுங்கள் பிள்ளைகளிடம்...

http://www.manithan.com/lifestyle/04/154887

No comments:

Post a Comment