Sunday, December 17, 2017

பலரும் அறியாத சோனியா காந்தியின் மறுபக்கம்!-மானங்கெட்ட இந்தியர்கள் பக்கம்!


"நாமிருவரும் சேர்ந்து எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இயலும். அது கடல் அளவு ஆழமாக இருந்தாலும் சரி, வானளவு உயரமாக இருந்தாலும் சரி.." - சோனியா காந்தி. சோனியா காந்தி பற்றி அனைவருக்கும் பரவலாக தெரியும்.காங்கிரஸ் கட்சியின் தலைவர், படுகொலைக்கு ஆளான முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி.
ஆனால், சோனியா மைனோ (Sonia Maino) பற்றி நாம் அறிந்திருக்க பெரிதாக வாய்ப்பில்லை. ஆம்! சோனியா மைனோ என்பது இவரது இயற்பெயர் (திருமணத்திற்கு முன்). சோனியா மைனோ எப்படி காதலில் விழுந்தார்?
தன் வாழ்க்கை துணையை எங்கே கண்டார்? அப்போது சோனியா மைனோ என்ன செய்துக் கொண்டிருந்தார்? என்ற பல கேள்விகளும் அதற்கான பதிலும் நாம் யோசித்ததும் இல்லை, அதை பற்றி அறிந்துக் கொள்வதற்கான அவசியமும் நமக்கு தேவைப்பட்டதில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கீழிறங்க போகிறார் சோனியா.
இவரது மகன் ராகுல் தலைவர் பொறுப்பு ஏற்கவிருக்கிறார். அரசியல் குடும்பத்தில் மருமகளான பிறகான சோனியாவை தான் நாம் அதிகம் அறிந்துள்ளோம். அதற்கு முந்தைய சோனியா எப்படி இருந்தார். அவரது ஆரம்பக் கால திருமண வாழ்க்கை மற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்களை நாம் இந்த தொகுப்பில் காணலாம்...
ரெஸ்டாரண்ட் பணிப்பெண்! அப்போது சோனியா மைனோவிற்கு 18 வயது. ஒரு ரெஸ்டாரண்ட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.
அப்போது ஒரு நாள் ஒரு அழகான, நல்ல தோற்றமுடைய பொறியியல் மாணவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது சோனியா மைனோவிற்கு. அது நட்பாகி, காதலாகி திருமணத்தில் சென்று முடிகிறது. அந்த அழகான பொறியியல் மாணவர் தான் ராஜீவ்காந்தி. இதற்கு முன்னும், பின்னும் என சோனியா காந்தியின் வாழ்க்கை பிரித்துப் பார்க்கும் படி உருவானது...
சோனியா ஸ்டீபனோ மற்றும் பாலோ மெய்னோ என்ற தம்பதிக்கு இத்தாலியில் இருக்கும் வெனெடோ எனும் பகுதியின் அருகே இருக்கும் கான்ட்ராடா மாயினி எனும் கிராமத்தில் பிறந்தவர். இவரது குடும்ப பெயர் மைனோ ஆகும். இவரது தந்தை கட்டிட வேலை செய்து வந்தவர். இவரது தந்தை 1983ல் மரணம் அடைந்தார். இவர் தனது இளமை காலத்தில் பெரும்பகுதியை இரண்டு சகோதரிகள் மற்றும் தாயுடன் அர்பஸனோ (Orbassano) என்ற நகரில் கழித்தார்.
1964ல் சோனியா காம்ப்ரிட்ஜ்ல் உள்ள மொழியியல் பள்ளியில் ஆங்கிலம் பயின்று வந்தார். அப்போது பகுதிநேர வேலையாக ஒரு ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்து வந்தார் சோனியா மைனோ. அப்போது தான் ராஜீவ் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் சோனியா.
அப்போது ராஜீவ் காந்தி ட்ரினிட்டி கல்லூரியில் பொறியியல் பயின்று வந்தார். அப்போது லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் "ராஜீவ் காந்தியின் மனைவி ஒரு 18 வயது மாணவி ஆவார். அவர் பல்கலைகழக ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்து வருபவர்" என குறிப்பிட்டிருந்தனர்.
ராஜீவ் காந்தி மற்றும் சோனியா மைனோவிற்கு 1968ல் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு தனது மாமியார் மற்றும் இந்தியாவின் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் வீட்டிற்கு மருமகளாக வந்தார் சோனியா காந்தி.
இவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி (1970) மற்றும் பிரியங்கா காந்தி (1972) என குழந்தைகள் பிறந்தனர். இந்தியாவின் மாபெரும் அரசியல் குடும்பத்தில் இருந்த ராஜீவ் மற்றும் சோனியா காந்தி அரசியலை விட்டு தள்ளியே இருந்தனர்!
கட்சி சார்ந்த எந்த சந்திப்பிலும், அலுவல் வேலையிலும் அல்லது அரசியலிலும் தலைக் காட்டாமல், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தனர் ராஜீவ் மற்றும் சோனியா காந்தி. ராஜீவ் காந்தி அப்போது ஏர்லைன் பைலட்டாக வேலை செய்து வந்தார். சோனியா காந்தி குடும்பம் மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
பெரும் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், மிக அமைதியாக, இயல்பாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் ராஜீவ் காந்தியும், சோனியாவும். அப்போது தான் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.
இந்திரா காந்தி தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எமர்ஜென்சி கொண்டுவந்தார். அப்போது கொஞ்ச காலம் வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் என்றும் சிந்தித்தார் ராஜீவ்காந்தி
1980 ஜூன் 23ல் ராஜீவ்காந்தியின் தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரணம் அடைந்துவிடவே 1982ல் அரசியல் களத்தில் இறங்கினார் ராஜீவ்காந்தி. (அவராக இறங்கவில்லை, வலுக்கட்டாயமாக அவரை அரசியலுக்கு அழைத்து வந்தனர் எனவும் அப்போதைய காலக்கட்டத்தில் கூறப்பட்டது)
பிறகு இந்திரா காந்தியின் படுகொலை ராஜீவ் காந்தியை முழுநேர அரசியலில் செயற்பட செய்தது. அப்போது தான் 1984 ராஜீவ் காந்தி இந்திய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது தான் ராஜீவ் காந்தியின் அதிகாரப்பூர்வ நிர்வாகியாக செயற்பட துவங்கினார் சோனியா காந்தி. ராஜீவ் காந்தி செல்லும் வெளிநாட்டு பயணங்களிலும் உடன் செல்வார் அவருடன் எப்போதும் அருகே இருந்தார்.
மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முகத்தை கடைசியாக பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
அவர் அணிந்திருந்த கைக் கடிகாரம் மற்றும் காலணிகளை வைத்து தான் அது ராஜீவ் காந்தியின் உடல் என கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னால் தான் சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். இவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதால் பிரதமர் ஆகக் கூடாது என் எதிர்ப்புகள் எழுந்தன. பிறகு காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
2013ம் ஆண்டில் ௧போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகில் மிகுந்த சக்தி வாய்ந்த நபர்கள் என்ற பட்டியலில் 21வது இடமும். அதிலேயே பெண்கள் வரிசையில் 9வது இடத்தையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்டியன் எனும் நாளேடு ஐம்பதிகளில் (வயதில்) சிறப்பாக உடை அணிந்த பிரபலங்கள் என்ற பட்டியலை 2013ல் வெளியிட்டது. அதில் சோனியா காந்தி முதல் ஐம்பது நபர்களில் ஒருவராக இடம் பெற்றார்.
டைம்ஸ் பத்திரிக்கை 2007 - 2008ல் உலகில் அதிக செல்வாக்கு கொண்டுள்ள நூறு நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. அந்த நூறு நபர்கள் பட்டியலில் சோனியா காந்தியின் பெயரும் இடம்பெற்றது. மேலும், நியூ ஸ்டேட்ஸ்மேன் 2010ல் வெளியிட்ட உலகின் செல்வாக்கு பெற்ற ஐம்பது நபர்கள் பட்டியலில் இடம் பெற்றார் சோனியாகாந்தி
சோனியா காந்தி ஒருபோதும் தன் வாழ்வில் பல பாதிப்புகளை கண்ட போதிலும், ஒரு பாதிக்கப்பட்ட நபராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.
தன் வாழ்வில் தன்னை ஒரு நாயகியாக தான் வெளிப்படுத்திக் கொண்டார். இத்தாலியின் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து இந்தியாவின் செல்வாக்கு மிக்க அரசியல் நபராக திகழ்ந்து. இன்னும் சில தினங்களில் ஓய்வு பெற காத்திருக்கிறார் சோனியா மைனோ என்கிற சோனியா காந்தி

http://www.jvpnews.com/india/04/153802

No comments:

Post a Comment