Wednesday, December 6, 2017

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் மைக்கேல் ஜாக்சன் இப்போது எப்படி இருப்பார்? இதோ புகைப்படம்


மைக்கேல் ஜாக்சன் எவ்வித அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் இன்று இவ்வாறு தான் இருந்திருப்பார் என்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் 1958-ஆம் ஆண்டு ஜாக்சன் குடும்பத்தின் எட்டாவது குழந்தையாக பிறந்தவர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன்.
மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் பல கஷ்ட படிகளை இஷ்டத்துடன் ஏறி புகழின் உச்சியை தொட்டு பார்த்தவர் மைக்கேல்.
பாப் இசையின் பரமபிதாவாக வலம் வந்து இவர், திட்டத்தட்ட 30 வருடங்கள் முயன்று, 100 உருமாற்று அறுவை சிகிச்சைகள் செய்து, பிறந்த போது இருந்த உருவத்திலிருந்து முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டு, தனக்கான புதிய உருவ அடையாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

பல தடைக்கற்களை தாண்டிய இவரது வெற்றிகரமான இசைப்பயணம், வரலாற்றில் அதிக விற்பனைகளை தொட்ட இசை ஆல்பம், உலகின் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இசைக்கலைஞர் என 38 கின்னஸ் விருதுகள் உள்ளிட்ட 172 முதன்மை விருதுகள் பெற்றுள்ளார். இதில் 34 விருதுகள் அவர் இறந்த பின்னர் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தாகியுள்ள மைக்கேல் ஜாக்சனுக்கு இரண்டாவது மனைவியின் மூலம் ப்ரியா ஜாக்சன் என்ற மகள் உள்ளார்.

இளம் வயதில் மைக்கேல் ஜாக்சனின் மூக்கு பகுதி தடிமனாக இருந்ததால் உறவினர்கள் அவரை தொடர்ந்து கிண்டலடித்து வந்துள்ளனர்.

இதனால் பல அறுவை சிகிச்சைகளை மூக்கு பகுதியில் மட்டும் செய்துள்ளார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட vitiligo நோயின் விளைவாக தோலின் சில பகுதிகளின் நிறம் வெள்ளையாக மாறியது.

அதை மறைப்பதற்கு உடலின் பிர பகுதியையும் வெள்ளையாக மாற்றும் அறுவை சிகிச்சையையும் செய்துள்ளார். இப்படி பல உருமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் இன்று எவ்வாறு தோற்றமளிப்பார் என டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

http://news.lankasri.com/usa/03/166787

No comments:

Post a Comment