Monday, December 18, 2017

அகதிகள் சொந்த நாடு திரும்ப பணம் தரும் ஜேர்மனி!


ஜேர்மனி தன் நாட்டில் அடைக்கலம் கோரி நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு, மீண்டும் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப பணம் அளிக்க முன்வந்துள்ளது.

போர் மற்றும் வேறு சில காரணங்களால் பல முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். அகதிகளை ஏற்றுக் கொள்வது குறித்து ஜேர்மனி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இப்போது அடைக்கலம் கோரி நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்குத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப, $3,570 பவுண்டைக் குடுக்கவுள்ளதாக ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் தகுதியானவர்கள் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் நாட்டிற்குத் திரும்பியவுடன் பணம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே, அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு முன்பே சொந்த நாடு செல்ல சம்மதிப்பவர்களுக்கு வேறு ஒரு திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் இந்த திட்டத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.

115,000 நிராகரிக்கப்பட்ட அகதிகளில், 8,639 பேர் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கு பெற்றனர் என பில்ட் அம் சொண்டாக் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிடத்தக்கது. இதில் பலரை மனிதாபிமான காரணங்களால் வெளியேற்ற முடியவில்லை எனவும் தகவல் கிட்டியுள்ளது.

http://news.lankasri.com/germany/03/167794

No comments:

Post a Comment