Monday, December 18, 2017

பெண்களே!.. கால் மீது கால் போட்டு உட்காருவதற்கு நீங்கள் கூறும் காரணம் சரிதானா?...


முன்பெல்லாம், நமது வீட்டில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என நமது தாத்தா, பாட்டி அதட்டுவார்கள். இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது சர்வ சாதாரணமாகிவிட்டது .
கால் மீது கால் போட்டு அமர்வது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களை காட்டிலும் பெண்களிடம் தான், கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் அதிகமாக உள்ளது. இதனை உடல்மொழி (Body Language) என்று தற்போது இருக்கும் தலைமுறையினர் கூறி வருகின்றனர்.
கால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக இரத்த சுழற்சி உண்டாகிறது. இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது.இது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது.
நீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பின் சமநிலையை பாதிக்கிறது. இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். மூட்டு வலி அதிகமாகலாம்.
சிலந்தி போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின் என்பார்கள். கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.
ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு உட்காருவதால், முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு போன்றவை உண்டாகிறது. எனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.

http://www.manithan.com/women/04/153982

No comments:

Post a Comment