Monday, December 18, 2017

உலக அளவில் எந்த நாட்டை சேர்ந்த மக்கள் அதிகம் புலம்பெயர்ந்துள்ளார்கள்? எந்த நாடு முதலிடம்

உலக அளவில் எந்த நாட்டை சேர்ந்த மக்கள் அதிக அளவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறித்த கணக்கெடுப்பு ஒன்றை ஐ.நா அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது, 1.5 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வளைகுடா நாடுகளிலும் மற்ற பிற வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அதிகமாக சவுதி போன்ற வளைகுடா நாடுகளையும், அமெரிக்காவையும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளையும் அதிகம் விரும்புவதாக இதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
  1. இந்தியா
  2. மெக்ஸிகோ
  3. ரஷ்யா
  4. சீனா
  5. வங்கதேசம்
  6. பாகிஸ்தான்
  7. உக்ரைன்
  8. பிலிப்பைன்ஸ்
  9. சிரியா
  10. பிரித்தானியா
2015ன் படி உலகம் முழுக்க 243 மில்லியன் மக்கள் வெளிநாட்டில் வசிப்பதாக கணக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.
புலம்பெயர் மக்களில் 72 சதவிகிதம் பேர் 25ல் இருந்து 60 வயதிற்குள் உள்ளவர்கள் ஆவர். இதில் பெரும்பாலான மக்கள் வேலை தேடியே வெளிநாடு செல்கின்றனர்.
இதில் 40 சதவிகிதம் மக்கள் அந்த நாட்டில் குடியுரிமை பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக சிலர் சுற்றுலா சென்று அப்படியே வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஐக்கிய எமிரேட்ஸ், ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளை மக்கள் அதிகம் விரும்பி அந்நாடுகளுக்கு செல்கின்றனர்.
1970ல் இருந்து மக்கள் அதிகமாக அமெரிக்கா செல்ல விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 46.6 மில்லியன் வெளிநாட்டு மக்கள் வசித்து வருகின்றனர்.

http://news.lankasri.com/othercountries/03/167742

No comments:

Post a Comment