Friday, December 22, 2017

பிச்சையெடுத்த கோடீஸ்வர தமிழரை காட்டிக்கொடுத்த ஆதார் கார்டு

உத்திரபிரதேசத்தில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த கோடீஸ்வர தமிழர் ஒருவர் ஆதார் கார்டு உதவியால் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ராய்ப்பூர் பகுதியில் முதியவர் ஒருவர் பிச்சையெடுத்து சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் தூங்கி காலத்தை கழித்துள்ளார். இந்நிலையில், இவரின் உடமைகளை சோதனையிட்ட சிலர் அதிலிருந்த ஆதார் கார்டை வைத்து இவர், திருநெல்வேலியை சேர்ந்த தமிழர் என கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஃபிக்ஸட் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்களும் இருந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த ஆசிரமத்தில் முதியவர் ஒப்படைக்கப்பட்டார்.


அங்கிருந்த பாஸ்கர் என்ற சாமியார், ஆதார் கார்டை வைத்து இவரது பெயர் முத்தையா என்பதை அறிந்துகொண்டு, இவரது மகள் கீதாவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விமானத்தின் மூலம் தனது தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்த கீதா, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் எனது தந்தை காணாமல் போனார், பல இடங்களில் அவரை தேடிவந்தோம். வயது முதிர்வு காரணமாக அடிக்கடி சுய நினைவு தப்பிவிடுகிறது.
மேலும், தந்தையை மீட்டுக் கொடுத்ததற்காகப் பாஸ்கர் சாமியாருக்கும் கீதா நன்றி தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/india/03/168034?ref=ls_in_d

No comments:

Post a Comment