Monday, December 18, 2017

துருக்கியில் விடுதலை செய்யப்பட்ட ஜேர்மன் பெண் செய்தியாளர்

தீவிரவாத பிரச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஜேர்மனியின் பெண் செய்தியாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியை சேர்ந்த பெண் செய்தியாளர் Mesale Tolu. இவர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருப்பதாகவும் கூறி, கடந்த ஏப்ரல் மாதம் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
Mesaleயின் கைது செய்யப்பட்டதை, இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என மனித உரிமை அமைப்புகள் விமர்சனம் செய்திருந்தன.

இந்நிலையில், திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், Mesale Tolu-வை துருக்கி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதுகுறித்து ஜேர்மனியின் இடதுசாரி கட்சியின் சட்ட வல்லுனர் Heike Hänsel, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துருக்கி நீதிமன்றம், Mesale Tolu-வை பயணம் மேற்கொள்வதற்கான தடை மற்றும் கட்டாய பதிவீடு என்ற இரண்டு நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.
Mesaleவுடன் ஐந்து செய்தியாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், பல ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு துருக்கி சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, Mesale Tolu விடுதலை செய்யப்பட்டது மிகப்பெரிய நிகழ்வு என ஜேர்மனி வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


http://news.lankasri.com/germany/03/167795

No comments:

Post a Comment