Friday, December 15, 2017

கணவன் மனைவியின் உறவு தொடர்பில் இலங்கையில் புதிய சட்டம்!


மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருமணம் பாலியல் வன்கொடுகைகளை மேற்கொள்வதற்கான ஓர் அங்கீகாரமாக கருதப்பட முடியாது.
மனைவியர் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வீட்டு வன்முறைகளாகவே கருதப்பட வேண்டும்.
மனைவியுடன் உறவு கொள்வது கணவனின் உரிமையாகவே கருதப்பட்டு வருகின்றது.
எனினும் தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மனைவி, கணவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் மனைவியர் கணவருக்கு எதிராக இலங்கையில் முறைப்பாடு செய்வதில்லை.
மத, கலாச்சார காரணங்களினால் இவ்வாறு முறைப்பாடு செய்வதில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளில் திருமண பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/lifestyle/01/168085?ref=rightsidebar

No comments:

Post a Comment