Friday, December 22, 2017

பழங்காலத்தில் சொத்தை பல்லை எப்படி எடுத்தார்கள்? புகைப்படம் உள்ளே

பழங்காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது உள்ள நவீன காலம் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. ஆனால் பழங்காலத்தில் பின்பற்றிய சில பழக்க வழக்கங்கள் நம்மில் பலருக்கும் தெரியாது.
அந்த வகையில் அந்த காலத்தில் வாயில் உள்ள சொத்தை பற்களை பிடுங்குவதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்றினார்கள் தெரியுமா?
1910-ம் ஆண்டு
பல் மருத்துவர் ஒருவருக்கு சொத்தை பல்லை பிடுங்க வேண்டும் என்றால் அவருக்கு இரண்டு இளைஞர்களின் உதவி தேவைப்படுகிறது. அந்த பல் பிடுங்குவதை பார்த்தால் சித்திரவதை செய்வது போன்று தெரியுமாம்.

1897-ம் ஆண்டு
ஒரு ஆங்கிலேய தாய் தனது மகனின் சொத்தை பல்லை எடுக்க ஒரு கருவியை கொண்டு பிடிங்குகிறார். இக்காட்சியை பார்ப்பதற்கு ஏதோ கொலை சம்பவம் நடந்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது.

1906-ம் ஆண்டு
வாயின் இரண்டு பக்கத்திலும் கிடுக்குப்பிடி போட்டு, அடைக்க முடியாத நிலைக்கு கொண்டு வந்து, அதன் பிறகு மருத்துவம் செய்யும் முறையை 1906-ம் ஆண்டில் பின்பற்றியதாக பல் மருத்துவ புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

1872-ம் ஆண்டு
பல்வேறு மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையில் ஒரு மனிதர், மற்றொரு நபரின் பல்லை, தனது உதவியாளரின் துணையோடு இழுத்து பிடுங்கிக் கொள்வார்களாம்.

1952-ம் ஆண்டு
1952-ல் பல் மருத்துவம் செய்ய, பல் பிடுங்க கண்டுபிடிக்கப்பட்ட மெஷின் மூலம் பல் பிரச்சனை இருக்கும் நபரை படுக்க வைத்து, அவரது தலை அசையாமல் இருக்கும் படி கட்டி, பல்லை பிடுங்கி வந்துள்ளனர்.

1957-ம் ஆண்டு
1957-ல் இந்தியாவின் மருத்துவ முறையில் இயற்கை பல் மருத்துவர் ஒருவர் தன்னிடம் மருத்துவம் காண வந்த நபர் ஒருவரின் பல்லை பிடுங்கிக் கொண்டிருக்கும் போது அசையாமல் இருக்க உதவியாளர் ஒருவரை வைத்து எடுக்கப்பட்டதாம்.

அமெரிக்கா
அமெரிக்காவின் கடற்கரை பகுதி பாதுகாப்பு படையை சேர்ந்த மருத்துவ சேவை செய்யும் நபர்கள். அலாஸ்காவை சேர்ந்த ஒரு கிராமத்தில் உள்ளூர் பெண்மணி ஒருவருக்கு பல் பிடுங்க மருத்துவம் செய்யும் போது எடுக்கப்பட்ட படம்.

பெர்ஷியா
பெர்ஷியாவில் பல் மருத்துவம் செய்யும் நபர் ஒருவர். தன்னிடம் பல் பிரச்சனையுடன் வந்த நோயாளியை குத்தவைத்து உட்கார செய்து, அவரது பல்லை பிடுங்கினார்களாம்.

1817-ம் ஆண்டு
1817-ம் ஆண்டில் பல் மருத்துவர் ஒருவர் தன்னிடம் பல் பிடுங்க வந்த நோயாளிக்கு எப்படி பல்லை பிடுங்குகிறார் என்பதை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த ஓவியம்.

சீனா
சீனாவில் 1890-ம் ஆண்டில் ஒரு சீன பல் மருத்துவர் சொத்தை பல்லுடன் வந்த நபர் ஒருவரின் பல்லை தனது உதவியாளர்களின் துணையோடு பிடுங்கிக் கொண்டிருப்பதை காட்டும் புகைப்படம் இதோ,

1810-ம் ஆண்டில்
1810-ம் ஆண்டில் வரையப்பட்ட ஓவியத்தில் சொத்தை பல்லுடன் தன்னிடம் வந்த நபருக்கு, பல் பிடுங்கும் இடத்தில், வேறு கிடுக்கி மூலம் சூடு வைத்து, அதன் அருகில் இருக்கும் பல்லை ஒரு ஆங்கில மருத்துவர் பிடுங்கியுள்ளார்.

ராணுவ வீரர்கள்
இரண்டாம் உலகப் போரின் போது, பல் பிரச்சனை இருந்த ராணுவ வீரர்களுக்கு ஒன்றாக பல் பிடுங்கும் சிகிச்சை அளித்துள்ளனர். அதில், வரிசையாக பல் பிடுங்கப்படும் போது எடுக்கப்பட்ட படம் இதோ,

ஆப்ரிக்கா
ஆப்ரிக்காவில் பல் மருத்துவர் ஒருவர் தன்னிடம் சொத்தை பல்லுடன் வந்த நோயாளிக்கு ஒரு மரக் குச்சியை வைத்துக் கொண்டு, வாயில் சிகரட் பிடித்துக் கண்டு பல் வைத்தியம் செய்து செய்துள்ளார்.

http://news.lankasri.com/history/03/168085?ref=ls_othn

No comments:

Post a Comment