Monday, December 18, 2017

40வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பிரான்ஸ் ஜனாதிபதி: கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சியினர்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தனது 40-வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிபர் மேக்ரான் தனது மனைவி Brigitte மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து நேற்றைய தினம் தனது 40-வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடினார்.
பாரீஸ் நகரிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள அழகிய பள்ளத்தாக்கான பகுதி, chateau of Chambord.
அப்பகுதியில் உள்ள vast எஸ்டேட்டில் தனது பிறந்தநாளை மனைவி மற்றும் குடும்பத்தாருடன் விமர்சையாக கொண்டாடினார் ஜனாதிபதி மேக்ரான்.
சராசரியாக அந்த நான்கு நட்சத்திர எஸ்டேட்டில் உள்ள ஒரு அறைக்கு வார நாட்களில் ஒரு இரவிற்கு 800 முதல் 1000 யூரோக்களும் வார இறுதி நாட்களில் 950 முதல் 1200 யூரோக்களும் வசூலிக்கப்படுவது வழக்கம்.
இந்த செலவுகள் அனைத்தும் அரசுக்கு வீண்செலவு, ஜனாதிபதி மக்களிடமிருந்து விலகி இருப்பதை இது உணர்த்துகிறது என்பன போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஜனாதிபதி அரண்மனை மறுப்பு தெரிவித்திருந்தது.
இருப்பினும் அவர் தேர்வு செய்த இடம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இடது மற்றும் வலதுசாரி தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இடதுசாரி தலைவர் Jean-Luc Melenchon இந்த கொண்டாட்டம் தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த வலதுசாரி தலைவர் Nicolas Dupont-Aignan, பிரான்ஸ் சந்தித்துவரும் கடுமையான வரி, பாதுகாப்பின்மை, குடியேற்றம் போன்ற நெருக்கடிகளுக்கிடையே இந்த விழா அவசியமானதாக தோன்றவில்லை என விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டங்களை அரசியல் தலைவர்கள் இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


http://news.lankasri.com/france/03/167695

No comments:

Post a Comment