Tuesday, December 19, 2017

2018ல் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்: பிரான்ஸ் தத்துவஞானி கணிப்பு


2018ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும், சீனா வல்லரசு நாடாக மாறும் மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும் என்று பிரான்ஸ் விஞ்ஞானி கணித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தத்துவஞானி நாஸ்டிரடாமஸ். எதிர்காலத்தை கணித்து கூறும் இவர், 5079ஆம் ஆண்டு வரை உலகில் என்னென்னவெல்லாம் நடக்க போகிறது என்று கணித்துள்ளார்.
அதன்படி, முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் மற்றும் பூகம்பங்கள் ஆகியன அவரின் கணிப்புபடியே நடந்துள்ளன. இவரின் கணிப்புகள் அனைத்தும், 1555ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் தொகுத்து வெளியிடப்பட்டன.

நாஸ்டிரடாம்சுக்குப் பிறகு அப்படிப்பட்ட தத்துவஞானி எவரும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில், அமெரிக்காவில் இரும்புப் பறவைகள் மூலமாக கட்டிடங்கள் இடிக்கப்படும், ரஷியாவில் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கும் என்று இவர் கூறியது போலவே இரட்டை கோபுரம் தகர்ப்பு மற்றும் குர்ஸ்க் தண்ணீரில் மூழ்கியது நடந்தது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும், உலக நாடுகளுக்கு தீவிரவாதம்தான் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்.

மேலும், கத்தோலிக்க சர்ச் தலைவர் மரணம் சம்பவிக்கும் என்றும், அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்படும் என்றும், இத்தாலி நாட்டில் பொருளாதார மாற்றம் மிகப்பெரிய அளவில் ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

இதைத் தவிர, 2033ஆம் ஆண்டில் இருந்து 2045ஆம் ஆண்டு வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் அதிகரித்து, பல பகுதிகள் அழியும். 2046ஆம் ஆண்டில் இருந்து 2070க்குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும்.
மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும், இறுதியாக 5079ஆம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவரது கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://news.lankasri.com/france/03/167831

No comments:

Post a Comment