Thursday, November 16, 2017

Wi-Fi சமிக்ஞையின் வலிமையை அதிகரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த எளிய வழி!


ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை இணைய இணைப்பில் வைத்திருப்பதற்கு இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுவது Wi-Fi தொழில்நுட்பம் ஆகும்.
இத் தொழில்நுட்பமானது சாதாரண நிலையில் அதிக பட்சம் 100 மீற்றர்கள் வரைக்குமே சிறந்த இணைய இணைப்பினை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.
எனினும் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக Wi-Fi சமிக்ஞையின் வலிமையை அதிகரித்து தூரத்தினை அதிகரிக்க செய்ய முடியும்.


இதற்கு அலுமினிய தகட்டினை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது Wi-Fi Router சாதனத்தின் பின்னால் அனைத்து வீடுகளிலுள்ள சமயலறைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமான அலுமினிய தகட்டினை வைப்பதன் ஊடாக இதனை செய்ய முடியும்.
இச் செயன்முறையின்போது Wi-Fi Router சாதனத்திலிருந்து அனைத்து திசைகளிலும் செல்லும் சமிக்ஞை அலுமினியம் தகட்டில் பட்டு தெறிப்படைந்து ஒருமுகப்படுத்தப்பட்டு முன்னோக்கி அனுப்பப்டுகின்றது.
இதனால் சிறந்த சமிக்ஞை கிடைக்கப்பெறுகின்றது.
இதனை அமெரிக்காவின் Dartmouth College கணினி விஞ்ஞானியான Xia Zhou உறுதிப்படுத்தியுள்ளார்.

http://news.lankasri.com/internet/03/136887

No comments:

Post a Comment