Friday, November 17, 2017

சம்பந்தன் கடுமையாக விமர்சித்ததை சிரித்துக்கொண்டே ரசித்து கேட்ட மஹிந்த !

தமிழுக்கு போராடி இளைஞர்கள் பலர் உயிரை தியாகித்தது இதற்குத்தானா?சிங்கள அமைச்சகள் சிங்களத்தில் பேச ,தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசுவதன் காரணம் என்ன?

தமிழ் மட்டும் தெரிந்தவர் அமைச்சரானால் ??!!

இவர்கள் தமிழர் தலைவர்கள் என்றால் தமிழ் எங்கே?இவர்களை பிரபாகரன் பாராளுமன்றம் அனுப்பியது அவருக்கும் தமிழ்ப்பற்று இல்லை என்பதாலா?
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை முன்வைத்து கடுமையான தொனியில் உரையாற்றியபோது இதை சிரித்தவாறே மஹிந்த ராஜபக்ஸ கேட்டுக்கொண்டிருந்ததுடன், சம்பந்தனின் உணர்வை தாம் புரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான 6 ஆம் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் இரா.சம்பந்தன் சுமார் 50 நிமிடங்கள் வரை உரையாற்றியதுடன், தனது உரையின் மஹிந்தவை விமர்சித்திருந்தார்.

சம்பந்தன் உரையாற்றும் போது சபைக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வந்தார். மஹிந்த வருவதை அவதானித்த சம்பந்தன் அவரின் பக்கமாக திரும்பி நின்று அவரைப் பார்த்து உரையாற்றினார்.



மஹிந்த தொடர்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த மஹிந்த, கூட்டு எதிர்க்கட்சியினரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதில், சம்பந்தன் மஹிந்தவிடம் நேரடியாகவே புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

சம்பந்தனின் உரையை அடுத்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ “சம்பந்தனின் உணர்வு பூர்வமான உரையை நான் புரிந்து கொள்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தன் உரையைத் தொடர்ந்தார்.
http://www.tamilwin.com/politics/01/165389

No comments:

Post a Comment