Thursday, November 9, 2017

இலங்கை வானொலிகளின் வசந்தகாலம்!


நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை, என்றுமது கலைவதில்லை, எண்ணங்களும் மறைவதில்லை அந்த நாள் அம்மா ஆனந்தமே !!
தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது. காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிக்கு இருந்த மதிப்பே தனி!
வானொலி நிகழ்ச்சிகளின் ஆரம்பக் குறியிசைகளைக் வைத்தே எந்த நிகழ்ச்சி தொடங்குகிறது என்பதை சொல்லிய காலம் பசுமையானவை

அவ்வகையில் பிரபலமான பல ஆரம்ப இசைகளை சொல்லலாம்.
பிறந்தநாள் வாழ்த்து,
பொங்கும் பூம்புனல் பூவும் பொட்டும்,
இசைக்களஞ்சியம்,
இன்றைய நேயர்,
ஒலிமஞ்சரி,
வாலிப வட்டம்,
திரை விருந்து
இப்போது நினைத்தாலும் மனம் இனிக்கும்.

இலங்கை வானொலி சேவையில் ஒலிபரப்பான தரமான ..அம்மாடியோவ்.........!!!!!!!
எத்தனை நிகழ்ச்சிகள் .....!!!!!!
1. கீதாஞ்சலி
2. புலரும் பொழுது
3. நினைவூட்டுகிறோம்
4 , பிறந்தநாள் வாழ்த்து
5. பொங்கும் பூம்புனல்
6. ஈழத்துப் பாடல்கள்
7. வாத்திய இசை
8. வானவில்
9. ஆண்குரல்
10 .பெண்குரல்
11. என்விருப்பம்
12. ஒருசொற்கோவை
13. பாட்டும் படமும்
14. பாட்டும் பதமும்
15. அந்தாதி
16. இசைமாலை
17. திரைதந்தஇசை
18. சித்திரகானம்
19. விவசாய நேயர் விருப்பம்
20. நெஞ்சில் நிறைந்தவை
21. தேனும் பாலும்
22. ஜோடி மாற்றம்
23. ஒருபடப்பாட்டு
24. மகளிர் கேட்டவை
25. முத்துக் குவியல்
26. இசையின்பம்
27. ஒன்றோடொன்று
28. கவியுள்ளம்
29. இசையமைப்பாளர்
30. இன்றைய நட்சத்திரம்
31.கோஷ்டி கானம்
32. ஜோடிக்குரல்
33. மலர்ந்தும் மலராதவை
34. நகைச்சுவை
35. இசைக் களஞ்சியம்
36 . இசையும் கதையும்
37. இன்பமும் துன்பமும்
38. நட்சத்திர கானம்
39. ஹிந்திப் பாடல்கள்
40. பக்திப் பாடல்கள்
41. பல்சுவை விருந்து
42. முத்து விதானம்
43.பூவும் பொட்டும்
44 . விகட தடாகம்
45. வாலிப வட்டம்
46.ஆடவர் அரங்கு
47. வீட்டுக்கு வீடு
48. இருவர் பாடியது
49. இன்றைய நேயர்
50. ஒலிச்சித்திரம்
51. நேயர் விருப்பம்
52. விடுமுறை விருப்பம்
53 . திரை விருந்து
54. நீங்கள் கேட்டவை
55.அஞ்சல் பெட்டி
56. பொப் இசை

காற்றில் கலந்து வந்து, இதயத்தை நிறைத்து, இரசனையை செம்மைப்படுத்திய பழைய‌ நினைவுகளை நினைத்துப் பார்ப்பதே ஒரு தனி சுவைதான்.


நினைவில் இருக்கும் அறிவிப்பாளர்கள்K.S.Raja, மயில்வாகனம், சரா. இம்மானுவேல், விமல் சொக்கநாதன், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், பிஎச் அப்துல் ஹமீது, எஸ். நடராஜா சிவம். போன்றவர்களுடன் கடமை புரிந்த பெண் அறிவிப்பாளர்கள் புவனலோஜினி, ராஜேஸ்வரி சண்முகம், எல்லோரும் வர்த்தக சேவை அறிவிப்பாளர்கள்!

No comments:

Post a Comment