Wednesday, November 15, 2017

"இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஆறு இலட்சம் ரூபா நஷ்டஈடு."


இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஆறு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

தனது கையில் புத்தர் உருவப்படத்தை பச்சைக்குத்திய நிலையில் இலங்கை வந்த பிரித்தானிய பெண் கைது செயப்பட்டதுடன், தடுத்து வைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதற்கமைய நயோமன் கோல்மன் என்ற பிரித்தானிய நாட்டு பெண்ணுக்கு, இலங்கை அரசாங்கம் சார்பில் 5 இலட்சம் ரூபாவும் கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரிகள் இருவர் தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் ஒரு இலட்சம் ரூபாயும், நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் பணம் வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கைக்கு வரும் போது தனது கையில் புத்தரின் உருவப்படத்தை பச்சை குத்திய குற்றச்சாட்டில் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரித்தானிய பெண் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்தின் மீதுள்ள கௌரவம் காரணமாக தான் பச்சை குத்தியதாகவும், அவமதிக்கும் நோக்கில் பச்சை குத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/security/01/165200

No comments:

Post a Comment