Wednesday, November 8, 2017

பூமி பற்றி எரியப்போகின்றது! – மாபெரும் விஞ்ஞானி கூறியுள்ள தகவல் !


பூமிக் கிரகம் வெப்பமடைந்து கொண்டே செல்கின்றது இதன் காரணமாக எதிர்வரும் 2600ஆம் ஆண்டுக்குள் பூமி வாழத்தகுதியற்ற கிரகமாக மாறிவிடும் என இயற்பியல் மேதையும் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவில் நடைபெற்ற அறிவியல் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது பூமியில் சனத்தொகை மிகவேகமாக அதிகரித்துக் கொண்டு செல்வதால் எரிபொருள் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பூமி வெப்பமடைந்து கொண்டே செல்கின்றது.
இந்த நிலை நீடித்தால் எதிர்வரும் 2600 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமி வெப்பத்தால் பற்றி எரியும் நிலை உருவாகிவிடும் என ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து மனித இனம் தப்பிக் கொள்ள வேண்டும் என்றால், சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் உள்ள அல்பா சென்டாரி என்ற கிரகத்தில் குடியேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லாதுவிடின் புளூட்டோ கிரகமானது மனிதர்கள் வாழத்தகுந்தது அங்கு சென்று குடியேறிவிட வேண்டும் எனவும் ஹாக்கிங் ஆலோசனை முன்வைத்துள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கின் தற்போதைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வாளருமாவார்.

அதுமட்டுமல்லாது கருந்துளைகள் மற்றும், விண்வெளி ஆய்வுகளுக்கு முக்கிய பங்காற்றி வரும் இவர் ஏற்கனவே பல தடவைகள் பூமிக்கிரகத்தின் முடிவு தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

வேற்றுக்கிரகங்கள் தொடர்பிலும், அங்கு மனிதர்கள் குடியேறுவது தொடர்பிலும் குறித்த ஆய்வுகள் பல ஸ்டீபன் ஹாக்கின் தலைமையில் கோடிக்கணக்கான டொலர்கள் செலவில் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.manithan.com/world/04/148823?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment