Thursday, November 23, 2017

தத்ரூபமாக உருவங்களை வடிவமைக்கும் கிராமத்து இளைஞன்

மட்டக்களப்பு - களுமுந்தன்வெளி கிராமத்தில் இளைஞரொருவர் களி, வெண்கலம் போன்ற பொருட்களைக் கொண்டு உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்து வருகிறார்.
சிறப்பு நுண்கலைமானிப் பட்டதாரியான பாலசுந்தரம் ரகுநாதன் எனும் இளைஞரே குறித்த கலையில் கைதேர்ந்தவராக உள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சிறப்பு நுண்கலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த குறித்த இளைஞர் வேவையில்லாப் பட்டதாரியாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையிலேயே அவர் தனது கற்றலுக்கு ஏற்றால்போல் இருக்கின்ற வளத்தைக் கொண்டு இயந்திரங்களையோ, இரசாயனங்களையோ பயன்படுத்தாமல் உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்து வருகின்றார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நான் யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலை துறையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளதோடு, எனது சகோதரன் ஒருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயின்று வருகின்றார்.
சிறியதொரு கிராமமாக எமது ஊர் இருந்தலும், கலைத்துறையில் மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் ஓரளவேனும் மிளிர்கின்ற எமக்கு மூலம் பொருட்கள் உள்ளிட்ட சில உதவிகளே தேவைப்படுகின்றன.
தேவையான மூலப்பொருட்க்கள் கிடைக்கும் பட்சத்தில் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் தேவைப்படுகின்ற சிற்பங்களையும், சித்திரங்களையும், எம்மால் தரமான முறையில் வடிவமைத்து வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.






http://news.lankasri.com/special/03/137457

No comments:

Post a Comment