Thursday, November 16, 2017

மருதநாயகத்தை வீரப்பரம்பரை எனும் கூவல். ...

Bommaiyah Selvarajan

 வீரப்பரம்பரை, விடுதலை போராட்ட வீரர் லிஸ்ட்ல நம்மூர் தாலிபான்ஸ் மருதநாயகத்தை சொல்லி நமக்கு டெரர் காட்டுவானுங்க. 

மருதநாயகம் எப்படா இந்திய சுதந்திரத்திற்கு போராடினான்....? 

ஆங்கிலேயன் படையில் சேர்ந்து காலை கழுவி விட்டு இங்கிருந்த பாளையக்காரங்கள் அத்தனை பேரையும் காலி பன்னுனான். மருதநாயகம் ஹைதர்அலியையே தோற்கடிச்ச வரலாறும் உண்டு.

மருதநாயகம் தோத்த ஒரே ஆள் பூலித்தேவன். அதுவும் கூட அடுத்த வருசமே மறுபடியும் படையெடுத்து பூலித்தேவன் கதையை முடிச்சான்.

இம்புட்டும் பன்னது வெள்ளைக்காரனுக்காக. நல்லா தெரிஞ்சிக்கோங்க மக்களே.., ஒவ்வொரு நாடா படையெடுத்து அதில் வெள்ளைக்காரன் கொடியை பறக்க விட்டது இவர் தான்.

சரி அப்புறம் எப்படி இவர் சுதந்திர போராட்ட வீரனா மாறுனார்...?

இங்கத்தான் இருக்கு வரலாற்று காமெடி. கைப்புள்ளை கதை இங்கத்தான் வருது.

ஆற்காடு நவாப் முகமது அலி வாலஜா ரவுசு விடறதில், உதார் விடறதில் பயங்கரமான ஆள். சரியா சொன்னா கைப்புள்ளை. செயல்பாட்டில் ஒண்ணுமே இல்லை. வாயிலேயே வடை சுடற ஆசாமி.

சாதாரண ஆசாமியான மருதநாயகம் குறுகிய காலத்திலேயே பல போர் செஞ்சி, எடத்தையெல்லாம் வெள்ளைக்காரனுக்கு
பட்டா போட்டு கொடுத்ததால மதுரையை மருதநாயகத்துக்கு பரிசா கொடுத்தாங்க.

இங்கத்தான் பஞ்சாயத்து ஸ்டார்ட். ஏற்கனவே நவாப் கைப்புள்ளை டைப் ஆசாமி. தனக்கு பக்கத்தில் இன்னொரு பலமான ஆசாமியா...அடிச்சா நம்மளால தாங்க முடியாதுன்னு வெள்ளைக்காரன்கிட்ட போய் ஓயாம பஞ்சாயத்தை கூட்டினார்.

பள்ளிக்கூடத்து பசங்க, 'என்னை அடிக்கிறான் டீச்சர் ' ரக கம்ப்ளெயிண்ட்கள் கூட உண்டு.

சரி பேசி முடிக்கலாம்னு மருதநாயகம் நவாப்பை சந்திக்க போனால் கைப்புள்ளை ஓடி ஒளிஞ்சிக்குவார். அது மட்டுமில்லை அப்படியே வெள்ளைக்காரன்ட போய் என்னைய கொலை பன்ன என் ஊருக்கே வந்துட்டான்னு பஞ்சாயத்தை கூட்டுவார்.

இப்படியே ஏகப்பட்ட பிராது கொடுத்து பஞ்சாயத்தை கூட்டி, வெள்ளைக்கார நாட்டாமை கடைசியில் மருதநாயகம், நவாப்புக்கு கீழ அவருக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கனும்னு தீர்ப்பு சொல்லிட்டான்.

இந்த லூசு பயலுக்கு கீழ நான் இருக்கனுமான்னு கடுப்பான மருதநாயகம் மதுரை தனி சுதந்திர நாடுன்னு சொல்லிட்டார்.

இப்ப வெள்ளைக்காரன் மதுரையை மீட்க ஆற்காடு நவாப்போட கூட்டணி வச்சி படையெடுத்து வர....

தலை கீழாக நின்னும் கோட்டையை பிடிக்க முடியலை. பலத்த சேதமும் ஆயிட்டு. இப்பத்தான் நவாப்பும், வெள்ளைக்காரனும் சேர்ந்து மருதநாயகம் கூட உள்ளவங்களுக்கு லஞ்சம் கொடுத்து தந்திரமா அவரை பிடிக்கிறாங்க.

பிடிச்சவுடனே விசாரணை பன்னலை. மூணு நாளைக்கு மருதநாயகத்துக்கு சோறு தண்ணி கொடுக்காம பட்டிணி போடறாங்க.
அதுக்கப்புறமா அந்த ஒத்தையாளுக்கு எழுநூறு பேரை காவலுக்கு வச்சி நவாப்புக்கிட்ட இழுத்துக்கிட்டு வராங்க.

ஏன்னா கைப்புள்ளை நவாப்புக்கு மருதநாயகத்து மேல அம்புட்டு பயம். தன்னை விழுந்து கும்பிட கைப்புள்ளை சொல்ல..., அவர் காறி துப்பிட்டு ..கடைசிவரை நவாப்பை மனுசனா கூட மதிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.

அடுத்து வெள்ளைக்காரன் விசாரணையை ஆரம்பிச்சான். எல்லாத்தையும் நல்லா விசாரிச்சிட்டு, மருத நாயகம் இது வரை சரியா கப்பம் கட்டுனது, பல நாடுகளை வெள்ளைக்காரனுக்கு பிடிச்சி கொடுத்து விசுவாசம் காட்டுனது எல்லாத்தையும் கணக்கிலெடுத்துக்கிட்டு விடுதலை பன்ன முடிவு பன்னுனான்.

கைப்புள்ளை நவாப் தீர்ப்பை கேட்டதும் கதறிட்டார். அவனை உயிரோட விட்டா என்னை கொண்ணுடுவான். அவன் கையில் சாகிறதை விட நீங்களே என்னை சுட்டு கொண்ணுடுங்கன்னு அழுது புலம்ப..., வெள்ளைக்காரன் தூக்கு தண்டனை கொடுத்தான்.

மருதநாயகத்தை தூக்குல தொங்க விட..., கயிறு அறுந்திட்டு. உடனடியா இன்னொரு கயிறு கொண்டு வந்து அவரை தொங்க விட்டாங்க.

ஆனா மருதநாயகம் தூக்கில் தொங்கிக்கிட்டே பேசினார். எனக்கு யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் தெரியும். இந்த கயிறால நான் சாக மாட்டேன். கணமான கயிறுல என்னை பலமணி நேரம் தொங்க விடுங்கன்னு சொன்னதும் அவரை இறக்கி, மூனாவது தடவை தடியான கயித்தில் பல மணி நேரம் தொங்க விட்டு அப்புறம் சாகிறார்.

அவர் உடலை அங்கேயே புதைச்சி சோலியை முடிச்சிட்டு கிளம்பறாங்க.

ஆனால் கைப்புள்ளைக்கு மட்டும் நைட் முழுக்க தூக்கம் வரலை. அவரை தூக்கில் தொங்க விட்ட பிறகும் பேசுனது, கயிறு அறுந்து விழுந்தது எல்லாம் சேர்ந்து கிறுக்கு பிடிச்சிட்டு மனுசனுக்கு.

ஒரு வேளை மருத நாயகம் புதைச்ச எடத்தில இருந்து கிளம்பி வந்தாலும் வந்திடுவார்னு பயத்தில் அரண்டு போயிட்டார்.

மறுநாளே வெள்ளைக்காரன்ட விவரத்தை சொல்லி, அவன் கைப்புள்ளை பயத்தை போக்க மருத நாயகம் பொணத்தை தோண்டி எடுத்து கைவேற, கால் வேறன்னு துண்டு துண்டாக வெட்டுனாங்க.

தலையை கொண்டு போய் திருச்சி, கைகளை பாளையங்கோட்டை, ஒரு கால் தஞ்சாவூர், இன்னொரு கால் திருவிதாங்கூர், மிச்சமிருந்த முண்டம மட்டும் அதே இடம்னு பார்ட் பார்ட்டா பிரிச்சி புதைச்சி தலை முழுகுனாங்க. அதுக்கப்புறம் தான் கைப்புள்ளை நவாப் நிம்மதியானார்.

முடிஞ்சதா...? இது தான் மருதநாயகம் கதை.

இதிலிருந்து சில கேள்விகளை நாம கேட்போம்.

வீர பரம்பரைனு கூவறாங்களே....? மருத நாயகத்தை சொல்லி கூவறவங்க யாராவது கைப்புள்ளை ஆற்காடு நவாப்பை பத்தி பேசுனாங்களா...?

கட்ட பொம்மனை விவகாரத்தில் இன்னைக்கு வரை எட்டப்பனை திட்டறோம். எந்த தொப்பியாவது ஆற்காடு நவாப்பை திட்டி நீங்க பார்த்தது உண்டா...?

இது மருதநாயகத்துக்கும், ஆற்காடு நவாப்புக்கும் இடையே நடந்த சண்டை. மருதநாயகத்தை தூக்கில் போட்டே ஆகனும்னு ஒத்தை காலில் நின்னு சாதிச்சது கைப்புள்ளை நவாப். ரெண்டு பேருமே முஸ்லிம். இந்திய விடுதலை போராட்டத்துக்கும் மருதநாயகத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு...? மருதநாயகத்தை சுதந்திர போராட்ட வீரர்னு சொல்றவனுக்கெல்லாம் உண்மையிலேயே அறிவு இருக்கா...?

சரி, மருதநாயகம் பெரிய அப்பாடக்கர்னே வச்சிக்குவோம். மருத நாயகத்தை தூக்கில் போட காரணமான ஆற்காடு நவாப் குடும்பம் இன்னமும் இருக்கு. அந்த பரம்பரை தான் ஆற்காடு இளவரசர் க்ரூப்.

ஆற்காடு இளவரசர் கூட வருசா வருசம் நோண்பு கஞ்சி குடிச்சி படம் எடுத்து பத்திரிக்கையில் போடும் யாருக்காவது கொஞ்சமாச்சும் கூச்சம் இருக்கா...?

Note : கூவுறது என்று உளறி தலைப்பு கொடுத்தவர் Asan Asan

வெளியீடு : தி.நகர் மன்னர் Rajendra Varmanஉத்தரவுப்படி சமஸ்தான அமைச்சர்Bommaiyah Selvarajan

No comments:

Post a Comment