Saturday, November 18, 2017

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

பகலில் இரை தேடும் உயிரினங்களை போன்று இரவில் இரை தேடும் உயிரினங்களும் உள்ளது.
அதில் ஒன்று தான் ஆந்தை. இந்த பறவை இரவில் தான் இரையை தேடும். ஏனெனில் அதற்கு பகலில் கண் தெரியாது.
ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஏன்?
ஆந்தையின் விழித்திரையில் குச்சி செல்கள் (rods) அதிகமாக இருக்கிறது. இவை மங்கிய வெளிச்சத்திலும் செயல்படக் கூடியவை.
அதனால் ஆந்தையால் இரவிலும் நன்றாகப் பார்க்க முடியும். இரை எங்கே இருக்கிறது என்பதை காண முடியும்.
ஆனால் பகலில் பிரகாசமான ஒளிக்கதிர்களைப் பெறக் கூடிய வகையில் கூம்பு (cones) செல்கள் மிகவும் குறைவாக ஆந்தைக்கு இருக்கிறது. அதனால் தான் ஆந்தைக்குப் பகலில் பார்வை நன்றாகத் தெரிவதில்லை.

http://news.lankasri.com/othertech/03/137058

No comments:

Post a Comment