Saturday, November 18, 2017

மட்டக்களப்பில் ஏழு மாணவர்களுடன் சிக்கிய பெண் தொடர்பான உண்மைகள் அம்பலம் !!

மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள பாடசாலையில் கல்வி பயிலும் இளைஞர் ஒருவர், வாழைச்சேனையில் கல்வி பயின்று மேற்படிப்பிற்காக மட்டக்களப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சம்பவங்களை அவதானித்த கிராமசேவகர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 7 போரையும் கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதில், காத்தான்குடி கணிப ஹாஜியார் ஒழுங்கை, கிரின் வீதி காத்தான்குடி எனும் விலாசத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தாயுடன் மட்டக்களப்பு வெயிலி வீதியில் உள்ள ஒருவர் காதல் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த வீட்டுக்கு அப்பெண் வந்துள்ளார், இந்த சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த வீட்டை சுற்றிவளைத்த போது ஆண் உறைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

வாடகைக்கு வீடு எடுத்த சந்தேகநபருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவரின் தாயார் வாழைச்சேனை பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த சந்தேகநபருக்கு கஞ்சா வைத்திருந்த காரணத்தால் 10,000 ரூபா அபராதமும் 7 நாள் விளக்கமறியலும், மற்றைய ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாண்டவெளி, பாரதி வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இது போன்ற முறையற்ற சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த மாணவர்கள் தொடர்பான தகவல்களை வெளியாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களும் பாவித்து வந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பெண் காத்தான் குடியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று குறித்த பெண் தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் பெரும் வறுமைக்கு மத்தியிலும் மாணவர்கள் படித்து உயர் நிலையை அடைந்த நிலையில், தற்போது செல்வம் காரணமாக மாணவர்களின் வாழ்வு சீரழிவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறித்த மாணவரின் பெற்றோர் செல்வந்த நிலையில் இருப்பதால், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த கிராம சேவகருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.







http://www.jvpnews.com/srilanka/04/150183

No comments:

Post a Comment