Wednesday, November 22, 2017

உலகத் தமிழர் பேரவைக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு


தமி­ழர்­க­ளின் குர­லாக ஒலிக்­க­வேண்­டிய உல­கத்­த­மி­ழர் பேர­வை­யா­னது, அர­சின் நிகழ்ச்சி நிர­லுக்­குள் சென்று, தமி­ழர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான போராட்­டத்தை நீர்த்­துப்­போ­கச் செய்­வ­தாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெற்ற கூட்­டத்­தில் குற்­றம்­ சு­மத்­தப்­பட்­டுள்­ளது.
சிட்­னி­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆஸ்­தி­ரே­லியத் தமி­ழர் பேர­வை­யின் பொதுக்­கூட்­டத்­தில், நடை­பெற்ற அர­சி­யல் கலந்­து­ரை­யா­ட­லி­லேயே, இந்­தக் குற்­றச்­சாட்டுக்கள் உறுப்­பி­னர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்­டது.

உறுப்­பி­னர்­க­ளால் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
உல­கத் தமி­ழர் பேர­வை­யா­னது வண. பிதா இம்­மா­னு­வே­லின் தலை­மை­யில், சுரேன் என்று அழைக்­கப்­ப­டும் பிரிட்­ட­னைச் சேர்ந்த இன்­னொரு செயற்­பாட்­டா­ளர் இணைந்து பொது அமைப்­பாக இல்­லா­மல், தமக்­கான நிகழ்ச்சி நிரலை முன்­னெ டுப்­ப­வர்­க­ளாக அண்­மைக்­கா­ல­மாக மாறி­யுள்­ள­னர்.
உல­கத் தமி­ழர் பேரவை தொடங்­கப்­பட்­ட­போது 13 தமி­ழர் புலம்­பெ­யர்ந்த நாடு­க­ளின் அமைப்­பு­கள் அதன் கிளை அமைப்­பு­க­ளாக இணைந்­தி­ருந்­தன. தற்­போது பத்து அமைப்­பு­கள் வெளி­யே­றி­யுள்­ளன.

பேர­வை­யின் செயற்­பாடே இதற்­குக் கார­ணம்.
இங்கு (ஆஸ்­தி­ரே­லிய) தமி­ழர் பேர­வை­யா­னது தொடங்­கப்­பட்­ட­போது,
தமி­ழர்­க­ளின் அடிப்­ப­டை­யான அர­சி­யல் உரி­மைக்­கான கோரிக்­கை­க­ளான தாய­கம், தேசி­யம், சுய­நிர்­ணய உரிமை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்வை வலி­யு­றுத்தி, அதன் இலக்­காகக் கொண்டு பல்­வேறு திட்­டங்­களை, வகுத்­துச் செயற்­ப­டு­வ­தா­கவே அதன் யாப்­பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது அந்­தக் கோரிக்­கை­க­ளைக் கைவிட்டு அர­சு­டன் இணைந்து செயற்­ப­டு­கின்­றது. தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­யாக செயற்­ப­ட­வேண்­டிய வண. இம்­மா­னு­வேல் இரா­ணு­வத்­தின் இரத்­தக்­கறை படிந்த வர­லாற்றை மறைக்­கும் வகை­யில் செயற்­ப­டு­கின்­றார் என்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இலங்கை அர­சு­டன் இணைந்து செயற்­ப­டு­வது போன்ற உல­கத்­த­மி­ழர் பேர­வை­யின் செயற்­பா­டு­க­ளால், தமி­ழர்­க­ளின் அணு­கு­முறை தோல்­வி­யில் முடி­வ­டைந்த மாதி­ரி­யான நிலையே காணப்­ப­டு­கின்­றது. அதனை உட­ன­டி­யாக மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும் என்று இந்­தக் கூட்­டத்­தில் கோரிக்கை முன்­வைக்­கப் பட்­டது.

ஆஸ்­தி­ரே­லிய தமி­ழர் பேர­வை­யா­னது, உல­கத்­த­மிழ் மக்­கள் பேர­வை­யின் அங்­க­மாக செயற்­ப­டா­மல், ஆஸ்­தி­ரே­லிய தமிழ் மக்­க­ளின் குர­லாக ஒலிக்­க­வேண்­டும் என­வும், தாயக மக்­க­ளின் போராட்­டங்­க­ளுக்­கான உந்­து­சக்­தி­யாக அது செயற்­ப­ட­வேண்­டும் என்­றும், அது­பற்­றிய முடிவை அடுத்த 3 மாதத்­தில் எடுக்­க­வேண்­டும் என­வும் கூட்­டத்­தில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

இதற்­குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய ஆஸ்­தி­ரே­லியத் தமி­ழர் பேர­வை­யின் தலை­வர் ஜெக­நா­தன், ஆஸ்­தி­ரே­லியத் தமி­ழர் பேர­வை­யின் அங்­கத்­த­வர்­க­ளின் கருத்­துக்­களை விளங்­கிக் ­கொள்­வ­தா­க­வும் அதற்­கான உறு­தி­யான முடி­வு­களை விரைந்து எடுப்­ப­தா­க­வும் அது­பற்­றிய விவரங்­கள் அங்­கத்­த­வர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டும் என்­றார்.

http://www.jvpnews.com/srilanka/04/150881

No comments:

Post a Comment