Tuesday, November 28, 2017

உயிருள்ள மீனை தொண்டையில் வைத்து விழுங்கும் மக்கள்: ஏன் தெரியுமா?

ஹைதராபாத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீனை தொண்டையில் வைத்து விழுங்க வைக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் விநியோகம் செய்யப்படும் இந்த மீன் மருந்து மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இதைச் சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா நோய் முற்றிலும் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
அதனால் இந்த மீன் மருந்தை பெற்றுக் கொள்ள தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை புகழ்பெற்ற பத்தினி சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பரம்பரையாக பல ஆண்டுகள் இலவசமாக செய்து வருகின்றார்கள்.
அதாவது, உயிருடன் இருக்கும் அசரை மீனின் வாயில் தாங்கள் தயாரித்த ஆஸ்துமா மருந்தை வைத்து, அதை ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுத்து விழுங்கச் செய்கின்றனர்.
அதுவே சைவ ஆஸ்துமா நோயாளியாக இருந்தால், அவர்களுக்கு மாற்று மருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் மீன் மருந்து வழங்கும் விழாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு மீன் மருந்து வழங்கப்பட்டது.
மீன் மருந்து பெறுவதற்காக இந்த மைதானத்தில் 2 நாட்களுக்கு முன்பில் இருந்தே மக்கள் குவியத் தொடங்கியதால், அவர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு, கழிப்பிட வசதிகளை தெலங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மீன் மருந்தை ஒருமுறை சாப்பிட்டாலே ஆஸ்துமா நோய்க்கு தீர்வு கிடைப்பதுடன், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதும் குணமாகும் என்றும் கூறுகின்றனர்.
அதனால் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் திரண்டு வருகின்றனர்.

http://news.lankasri.com/lifestyle/03/166243

No comments:

Post a Comment