Thursday, November 23, 2017

கிறிஸ்துமஸ் கொண்டாட யாருமில்லையே! ஏங்கிய முதியவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

தனியாக வசித்து வந்த முதியவர் தன்னுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட யாரும் இல்லை என ஏங்கிய நிலையில் அவருக்கு பலர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

ஜேர்மனியின் பெர்லினில் வயதான முதியவர் யாரும் இல்லாமல் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். அவரின் மனைவியும் இறந்துவிட்டதால் தனிமையில் தனது நாட்களை போக்கி வருகிறார்.

இந்நிலையில், விரைவில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தன்னுடன் கொண்டாட யாரும் இல்லையே என்ற ஏக்கம் முதியவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அவர் அங்குள்ள அறிவிப்பு பலகையில், நீங்கள் பண்டிகையை கொண்டாடும் போது உங்கள் டேபிளில் இடமிருந்தால் அங்கு உட்கார என்னை அழைங்கள் என உருக்கமாக எழுதியிருந்தார்.


இதை பேமினா லிசா என்ற பெண் பார்த்த நிலையில் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவானது 6000 முறை பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முதியவரை தங்கள் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் விருந்துக்கு வர அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து லிசா கூறுகையில், இந்த காலத்தில் யாரும் அறிவிப்பு பலகையை எல்லாம் பார்ப்பதில்லை, அதனால் தான் அதை பேஸ்புக்கில் பதிவு செய்தேன்.

இவ்வளவு பேர் முதியவரை விருந்துக்கு அழைத்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர் Edeka's tear-jerking என்ற பெயரில் வெளிவந்த கிறிஸ்துமஸ் விளம்பரம் மிக பிரபலமாகும்.

அதில் வயதான முதியவர் ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் தான் இறந்துவிட்டதாக பிள்ளைகளுக்கு பொய்யான தகவல் கொடுப்பார்.
இதையடுத்து பதறி அடித்து ஓடி வந்த பிள்ளைகள் முன்பு முதியவர் காட்சி தருவார். பின்னர் எல்லோரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

தனிமையை போக்கவே அவர் இப்படி செய்வார். இந்த விளம்பரத்தை பார்த்தே இந்த முதியவரும் அது போன்ற ஒரு வித்தியாச முறையை கடைப்பிடித்தார் என கருதப்படுகிறது.

http://news.lankasri.com/germany/03/137444

No comments:

Post a Comment