Tuesday, November 21, 2017

பிரித்தானிய கடவுச்சீட்டில் பிரஞ்சு வாசகங்கள்!!

பிரித்தானியாவில் புழக்கத்தில் இருந்துவரும் கடவுச்சீட்டில் 2 பிரஞ்சு சொற்றொடர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் பழுப்பு நிற கடவுச்சீட்டானது மிக விரைவில் ராயல் நீல வண்ணத்தில் உருமாற உள்ளது.
வண்ணத்தில் மட்டுமின்றி வடிவமைப்பிலும் சில புதுமைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த புதிய கடவுச்சீட்டை பிரான்சின் பிரபல நிறுவனம் ஒன்று வடிவமைத்து தயாரித்து வருகிறது.

ஆனால், குறித்த கடவுச்சீட்டில் 2 பிரஞ்சு சொற்றொடர்கள் பொறிக்கப்பட்டுள்ளதை பெரும்பாலான பிரித்தானியர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அது என்னவென்றால் பிரித்தானிய கடவுச்சீட்டின் முகப்பு பக்கத்தில் "Dieu et mon Droit" என்ற சொற்றொடராகும்.

இது 1157 முதல் 1199 வரை இங்கிலாந்தை ஆண்ட முதலாம் ரிச்சர்ட் பயன்படுத்திய வாசகங்கள் என கூறப்படுகிறது. இதன் பொருள் கடவுள் மற்றும் எனது உரிமை என்பதாகவும்.

இன்னொரு வாசகமானது “Honi soit qui mal y pense” என்பதாகும். இதன் பொருள் தீங்கு நினைப்பவருக்கு அவமானம் என்பதாகும்.

http://news.lankasri.com/uk/03/137270

No comments:

Post a Comment