Saturday, November 18, 2017

பிரபல பெரும்புள்ளியின் வாரிசுகள் சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்!

முன்னாள் சி.எம்.ஓ அதிகாரியாக இருந்தவரின் பிள்ளைகள் வறுமையில் பிச்சையெடுத்து சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள சிறிய வீட்டில் பி.என் மதூர் (70) என்ற முதியவர் தனது இரண்டு சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.

வறுமை காரணமாக இவர்கள் பிச்சையெடுத்து தான் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், மூவரும் லக்னோ நகரில் சி.எம்.ஓ என்ற உயர் பொறுப்பில் இருந்த மறைந்த மருத்துவர் எம்.எம் மதூரின் பிள்ளைகள் என தெரியவந்துள்ளது.

லக்னோவில் ரோட்டி வங்கி இவர்கள் வாழும் பகுதிக்கு வந்து கஷ்டபடுவோர்க்கு உதவி செய்த போது மூவரும் பெரும் புள்ளியின் மகன் என தெரிந்து கொண்டது.

இதையடுத்து வங்கி அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளது. இதுகுறித்து வங்கியின் ஒருங்கிணைப்பாளர் மோகித் ஷர்மா கூறுகையில், 20 நாட்களுக்கு முன்னர் இங்கு வரும் போது மூவரும் மருத்துவர் எம்.எம் மதூரின் பிள்ளைகள் என்பதை தெரிந்து கொண்டோம்.
அவர்களுடன் தொடர்பில் இருந்து உதவி வருகிறோம், வீடு முழுவதும் குப்பையாக இருந்த நிலையில் அதை சுத்தம் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

பி.என் மதூர் கூறுகையில், நான் 1947-ல் பிறந்தேன், என் தந்தை சி.எம்.ஓ ஆவார். சிறுவயதில் நானும் என் இளைய சகோதரிகளான ராதே மற்றும் மாந்தவியும் மிகவும் வசதியாக வளர்ந்தோம்.

என் பெற்றோர் கார் விபத்தில் திடீரென உயிரிழந்தார்கள். இதையடுத்து என் சகோதரிகளுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டது.

நான் பட்டப்படிப்பு படித்தாலும் எங்கும் வேலை கிடைக்கவில்லை. பெற்றோர் இறந்தவுடன் என் உறவினர்கள் யாரும் எங்களிடம் பேசவில்லை.

டெல்லியை சேர்ந்த ஒரு உறவினர் மட்டும் எங்களுக்கு எப்போதாவது உதவுவதுடன் எங்களை வந்து பார்த்து செல்வார்.

அவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார்.எனக்கு சமைக்க தெரியாது,  அதனால் தான் பிச்சையெடுத்து சாப்பிட்டு வருகிறோம். எங்கள் மூவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைபடுகிறேன். யாராவது எங்களுக்கு உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

http://news.lankasri.com/india/03/137071?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment