Thursday, November 16, 2017

தனி ஆளாக பிரான்ஸுக்கு சென்று அகதிகளுக்கு உதவிய பிரித்தானியர்: நெகிழ்ச்சி தருணம்


பிரித்தானியவர் ஒருவர் வடக்கு பிரான்ஸில் உள்ள காலேஸ்க்கு சென்று அங்கு வசிக்கும் அகதிகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்துள்ளார்.
பிரித்தானியாவின் கம்ப்ரியா கவுண்டியில் உள்ள கார்லிசில் நகரை சேர்ந்தவர் ஜன் கிரீன்யுட். இவர் Opshops என்ற தொண்டு சேவைகளுக்கு உதவிபுரியும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வடக்கு பிரான்ஸின் காலேஸ் நகருக்கு ஜன் வந்தார். பல டன் போர்வைகள், பைகள், கூடாரங்கள், உணவு பொருட்கள், கழிப்பறை பொருட்களை அவர் கொண்டு வந்தார்.
எல்லாவற்றையும் அங்கு வசிக்கும் அகதிகளுக்கு ஜன் கொடுத்து உதவினார். இதை நேரடியாக அகதிகளிடம் அவர் கொடுக்கவில்லை, அகதிகள் நலனுக்காக பாடுபடும் நிறுவனங்களிடம் பொருட்களை ஒப்படைத்தார்.

இந்த உதவியானது கடினமான சூழ்நிலைகளில் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தனது ஊருக்கு கிளம்பும் முன்னர் ஜன் கூறுகையில், அகதிகளுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. உள்ளூர் மக்களுடைய தொடர்ச்சியான தாராள மனப்பான்மைக்கு நன்றிகளை கூறி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
காலேஸில் இருந்த மிக பெரிய ஜங்கிள் அகதிகள் முகாம் கடந்தாண்டு கலைக்கப்பட்ட பின்னரும் அந்த பகுதியில் 2000 என்ற எண்ணிக்கையிலான அகதிகள் இன்னும் தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/france/03/136904

No comments:

Post a Comment