Sunday, November 26, 2017

போற்றி அழிக்கப்பட்ட தலைவன்!


தலைவா போற்றி...

தமிழினத் தலைவர் மீதினில் 108 போற்றி

காப்பு

சீர் மேவும் ஈழ திருநாட்டு மன்னவன்
பார் வாழும் தமிழர் இல்லத்து பகலவன்
கார் இருளகற்றும் கரிகாலன் மீதினிலே
போற்றி பாடி புகழ்பரப்ப விதைத்த
புலி மற மாவீரர் மீதினிலே காப்பதாமே....

தமிழ் இன அரணே போற்றி!
தாய்த் தமிழ் தளிரே போற்றி!
வாய்த்த நம் வளமே போற்றி!
வரலாற்றின் பேர் ஒளியே போற்றி!
வல்வை இன் செல்வா போற்றி!
வளம் மிகு வளவா போற்றி!
ஈடிலா அரும் பொருளே போற்றி!
ஈழ மன்னவா போற்றி! போற்றி!

தமிழ்க் குடி காத்தோய் போற்றி!
தன் குடி ஈந்தோய் போற்றி!
கடல்தனை ஆண்டோய் போற்றி!
காற்றிலும் பறந்தோய் போற்றி!
மாதர் தம் மடமையை உடைத்தோய் போற்றி!
மாசில்லா மன்னவா போற்றி!
தேற்றுவார் இல்லா இனத்தின் தேவனே போற்றி!
தேசியத்தலைவனெனும் பெரோளியே போற்றி! போற்றி!

மாறில்லா கொள்கை கொண்டோய் போற்றி!
மனிதத்தின் மான்புறு வடிவே போற்றி!
செந்தளிர்கள் காத்தோய் போற்றி!
செஞ்சோலை தனை அமைத்தோய் போற்றி!
செங்கொடி கண்ட செல்வனே போற்றி!
அன்பு இல்லம் கண்டோய் போற்றி!
அனாதை என்ற சொல்லை அழித்தோய் போற்றி!
எத்திக்கும் புகழ் கொண்ட எந்தையே போற்றி! போற்றி!

முப்படை கண்ட தமிழா போற்றி!
மூவுலகிலும் காணாத புண்ணியா போற்றி!
இந்தியப் படைகளை எதிர்த்தோய் போற்றி!
இரும்பின் திடம் கொண்டோய் போற்றி!
கரும்பினை ஒத்த குணத்தோய்போற்றி!
கார் இருள் அகற்றிய கதிரே போற்றி!
நெருங்கும் பகையை நீர்த்தாய் போற்றி!
நேரிய பார்வை கொண்ட மன்னவா போற்றி!போற்றி!

நெருப்பினை ஒத்த விழியோய் போற்றி!
நிலவினை ஒத்த முகத்தோய் போற்றி!
நீறு பூத்த நெருப்போய் போற்றி!
காவல் துறை கண்டோய் போற்றி!
ஏவல் துறைகளை அழித்தோய் போற்றி!
நிழல் அரசு கண்டோய் போற்றி!
நீதியை நிலை நாட்டினாய் போற்றி!
நின்மதி தந்த நித்திலா போற்றி! போற்றி!

கல்விக் கழகம் கண்டோய் போற்றி!
கண்ணெனத் தமிழை காத்தோய் போற்றி!
கலைகளை வளர்த்த காவியாக போற்றி!
விலைபேச முடியா வீரியா போற்றி!
அலைதனை ஆண்ட அண்ணனே போற்றி!
நிலை தவறாத நீதியனே போற்றி!
குலையாத அரசின் கோவே போற்றி!
தலையான எங்கள் தலைவா போற்றி! போற்றி!

வேலுப்பிள்ளையின் மைந்தனே போற்றி
வீரச்சேனையின் அதிபதியே போற்றி
வித்தகனே தத்துவனே வீரனே போற்றி
விடுதலைப் புலி அமைத்த வீரியமே போற்றி
விழியாகி எங்கள் மொழியான தாரகமே போற்றி
பார்வதி அம்மா தம் பாலகா போற்றி
பாரில் தமிழர் தம் பகலவா போற்றி
பாசம் கொண்ட தலைவா போற்றி போற்றி

உலகம் வியக்கும் உன்னதமே போற்றி
ஊராண்ட தமிழின மாண்பே போற்றி
தீரனே! தேசக் காவலனே போற்றி
தீச்சுவாலையை முறியடித்தோய் போற்றி
தீந்தமிழை அரசாள வைத்தோய் போற்றி
துயிலும் இல்லங்கள் அமைத்தோய் போற்றி
தொலை நோக்கம் கொண்டோய் போற்றி
தூய தமிழ் தன் காவலா போற்றி போற்றி

சூரியத் தேவனே சுந்தரா போற்றி!
சூழ்ந்த தொல்லைகள் சுட்டெரித்தோய் போற்றி!
கானகம் ஆண்ட காவலனே போற்றி!
இணுவை மண்ணில் பிறந்தோய் போற்றி!
இன்னல்கள் யாவும் களைந்தோய் போற்றி!
புங்கை மண்ணில் மணந்தோய் போற்றி!
புத்தொளி எமக்கு பாய்ச்சினோய் போற்றி!
மலரும் ஈழத்தின் மான்பே போற்றி! போற்றி!

மீன்மகள் தேசத்தின் சூரியா போற்றி!
தேன்மலர் காட்டின் தெய்வமே போற்றி!
முல்லை மண்ணை மீட்டோய் போற்றி!
மூத்த குடிக்காய் இல்லம் அமைத்தோய் போற்றி!
ஓயாமல் சுழன்ற அலையே போற்றி!
நெருப்பாற்றில் நீந்திக் கடந்தோய் போற்றி
ஒருதாய் மக்களாய் எமை இணைத்தோய் போற்றி!
ஓங்கு புகழ் கொள் ஒப்பிலானே போற்றி போற்றி!

காத்திகை மைந்தனே கதிரோனே போற்றி!
காலம் தந்த காவியனே கரிகாலனே போற்றி!
நீல வான எல்லை தனை அளந்தோய் போற்றி!
நித்திலம் முழுதும் புகழ் பெற்றோய் போற்றி!
எம் தமிழ் குலத்தின் கொழுந்தே போற்றி.!
ஏற்றம் கண்ட மாபெரும் மன்னவா போற்றி!
காற்றென பகை சாடி காத்தோய் போற்றி!
ஊற்றென எழும் எங்கள் உணர்வே போற்றி போற்றி!

கரிகால வளவனே காவியனே போற்றி!
வழிகாட்டி வலுச் சேர்க்கும் வல்லவா போற்றி!
புறநானூற்றுப் போர்ப் புலியே போற்றி!
அகம் யாவும் நிறைந்த ஐயனே போற்றி!
அகிலத் தமிழரை ஆண்டவா போற்றி!-
பெருமையில்லாப் பேரரசே போற்றி!
பிரபாகரன் என்னும் பெருநிதியே போற்றி!
ஈழத்தின் தலைவா போற்றி! போற்றி!


ஈழத்துப்பித்தன்-Inuvaijur Mayuran

No comments:

Post a Comment