Saturday, November 18, 2017

40,000 மருத்துவர்கள் போராட்டம்: சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்த மாணவி!

கர்நாடகாவில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிகிச்சை கிடைக்காமல் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 40,000-க்கும் அதிகமான தனியார் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ஆம் திகதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் போராட்டம் காரணமாக தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

புஜா (19) என்ற பி.காம் பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவி நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

ஆனால் மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக எங்குமே அவரால் சிகிச்சை பெறமுடியவில்லை.

இதன் காரணமாக நேற்று காலை புஜா பரிதாபமாக இறந்தார். இதனிடையில் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.

இதையடுத்து நேற்று பெங்களூர், மங்களூரில் புறநோயாளிகள் பிரிவு மட்டும் திறக்கப்பட்டது.

http://news.lankasri.com/india/03/137062?ref=recommended2

No comments:

Post a Comment