Monday, October 16, 2017

300 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட உலக அழிவு! – சிக்கியது நியூட்டனின் குறிப்பு


பூமிக்கிரகத்தின் அழிவு தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிவியல் மேதையுமான ஐசாக் நியூட்டன் உலக அழிவு தொடர்பில் கணித்து கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

உலக அழிவு தொடர்பில், ஒருபக்கம் சதியாலோசனைக் கோட்பாடுகள், மறுபக்கம் விஞ்ஞானிகளின் தகவல்கள் அத்தோடு மதக்கோட்பாட்டாளர்கள் முன்வைக்கும் கருத்துகள் என அண்மைய நாட்களில் பலவிதமான செய்திகள் வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உலக அழிவு ஆரம்பமாகின்றது என அமெரிக்க ஆய்வாளரான டேவ் மீடி அண்மையில் தெரிவித்த தகவல்களால் மேற்குலகம் தற்போது அச்சமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் 1704 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே உலக அழிவு தொடர்பில் ஐசாக் நியூட்டன் கணிப்புகள் மூலம் குறித்து வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விவிலியத்தின் வசனங்கள் மற்றும், தீர்க்கதரிசி தானியேலின் கூற்றுகளை ஆராய்த பின்னரே நியூட்டன் சுமார் 4000 இற்கும் அதிக பக்கங்களில் உலக அழிவினை பதிவு செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2060 ஆம் ஆண்டு முதல் உலக அழிவு ஆரம்பமாகும் என நியூட்டனின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆச்சரியமான விடயம் யாதெனின் நியூட்டனின் குறித்த குறிப்பு பதிவுகளில் இதுவரை உலகில் நடந்த விடயங்களும் கூட மிகச்சரியாக கணித்து கூறப்பட்டுள்ளதே ஆகும்.

மேலும், கொள்கைகள் அற்ற நாடுகள் காரணமாக இந்த உலகின் அழிவு ஆரம்பமாகும் எனவும், உலக அழிவு தொடர்பில் பலரும் எதிர்வு கூறினாலும் அவையனைத்தும் பொய்த்துபோகும் அதன் பின்னர் அழிவு ஆரம்பமாகும் என நியூட்டனின் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நியூட்டனின் குறிப்புகளை ஆய்வு செய்த ஆய்வாளர் ஒருவர், தற்போது தொடர்ந்தும் உலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நியூட்டனின் கணிப்பை மெய்ப்பிப்பதாகவே உள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, எத்தனை முறைகள் உலக அழிவுகள் தொடர்பில் கதைகள் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில், “நாம் வாழும் பூமி என்றுமே அழியாது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் தொடர்ந்து வருகின்றது.

ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் உலக நடப்புகளை அவதானித்து , தீர்க்க தரிசனங்களை ஆய்வு செய்யாமலேயே உலகம் அழிவை நோக்கியே பயணிக்கின்றது என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியும்.

எனினும் தீர்க்கதரிசிகளின் கணிப்புகளின் படி திடீரென ஒட்டுமொத்த பூமியும் அழிவடையுமா என்பதே இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

http://www.manithan.com/science/04/145539

No comments:

Post a Comment