Tuesday, August 1, 2017

உறவுகளை காயப்படுத்தும் பழக்கங்கள்: உங்களிடம் உள்ளதா?

நமது வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவரும் பல்வேறு விடயங்களை சந்திக்கின்றோம். அத்தகைய வாழ்க்கையில் நம்முடன் கடைசி வரை எதுவுமே உடன் வர போவதில்லை.
அதனால் நாம் வாழும் போதே அனைவருக்கும் நல்ல மனிதனாக வாழ்ந்து நல்ல பெயர், புகழை பெற்றால் அது நாம் இறந்த பின்பு கூட நமக்கு பெருமையை சேர்க்கும்.
எனவே பிறருக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்களை திருத்திக் கொள்வது மிகவும் நல்லது.
மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும் பழக்கங்கள்?
  • உங்களுக்கு ஒரு ஏழை நண்பர் இருந்தால் அவரிடம் சென்று என் அப்பா எனக்கு இவ்வளவு விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுத்தார் என்று கூறுவது சிலரின் பண்பாக இருந்தாலும், அது அந்த ஏழை நண்பனுக்கு மனம் வருத்தத்தை ஏற்படுத்தும்.
  • சில அறிவுரைகளை மற்றவர்களுக்கு கூறும் போது, அந்த விடயங்களில் நாம் சரியாக உள்ளோமா என்பதை தெரிந்துக் கொண்ட பின் அறிவுரையை வழங்க வேண்டும்.
  • ஒருவரை பற்றி அவர் இல்லாத நேரத்தில் அவருக்கு பின்னால் பேசுவது அவர்களுக்கு எத்தனை வலியை கொடுக்கும் என்பதைப் பற்றி நாம் யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. இதனால் பல பின்விளைவுகளை நாம் சந்திக்கக் கூடும்.
  • அன்னதானம் வழங்கும் போது, அதை ஒரு வேளை உணவுக்கு வழியில்லாமல் பசியால் வாடும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்தால், மன நிறைவும், கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
  • நமக்கு இருப்பதை பெரிதாக நினைத்து வாழாமல், பிறர் வைத்திருக்கும் பொருட்களுக்கு ஆசைப்படுவது மிகப்பெரிய குற்றமாகும். அதனால் மற்றவர்களுக்கு மன வருத்தம் தான் ஏற்படும்.
http://news.lankasri.com/lifestyle/03/129780

No comments:

Post a Comment