Thursday, August 3, 2017

மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பிய நாடு கடத்தப்பட்ட பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு

நேபாளை பூர்விகமாக கொண்ட Bivsi Rana என்ற பெண் கடந்த மே மாதம் நாடு கடத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்திலிருந்து ஜேர்மனிக்கு Bivsi Ranaவின் பெற்றோர் குடியேறியுள்ளனர்.
ஜேர்மனியிலேயே Bivsi Rana பிறந்துள்ளார், தாய்நாடான நேபாளத்திற்கு ஒருமுறை கூட சென்றதில்லை.
இந்நிலையில் பள்ளியில் படித்து வந்த Bivsi Rana, ஜேர்மன் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பத்தில் தகவல்களை தவறாக அளித்த காரணத்தினால் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது, இதனால் கடந்த மே மாதம் நாடு கடத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவரது தோழிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கடுமையான போராட்டத்தின் விளைவாக Bivsi Rana மீண்டும் ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்.
நேற்று Düsseldorf Airport வந்திறங்கிய Bivsi Rana-வை நண்பர்கள் வரவேற்றனர்.
http://news.lankasri.com/germany/03/129996

No comments:

Post a Comment