Wednesday, August 23, 2017

மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்! முழு சூரிய கிரகணத்தின் கலக்கல் புகைப்படம்

பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்துள்ளனர்.
நேற்றைய தினம் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்திருந்தது. இது இந்த ஆண்டில் நிகழ்ந்த இரண்டாவது சூரிய கிரகணமாகும். இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
எனினும், அன்று ஏற்பட்ட சூரிய கிரகணத்துக்கும், நேற்று தென்பட்ட சூரிய கிரகணத்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருந்திருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது சூரியனின் மையப்பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்பட்டது. எனினும், நேற்றைய சூரிய கிரகணத்தின் போது முழு சூரியனையும் நிலவு மறைத்திருந்தது.
இதனை கண்ட மக்கள் பலரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment