Thursday, August 3, 2017

திரு­ம­லை இர­க­சிய முகாமில் என்ன நடந்தது?? மீண்டும் ஒரு புதுத் தகவல்

திரு­மலை கடற்­படை முகாமில் உள்ள கன்சைட் இர­க­சிய சித்திர­வதை கூடங்கள் என நம்­பப்­படும் சிறைக் கூடங்­களில் என்ன நடந்­தன என்­பது குறித்து அனைத்து தக­வல்­களும் முன்னாள் கடற்படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட, முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க, லெப்­டினன் கொமாண்டர் சுனித் ரண­சிங்க மற்றும் லெப்­டினன் கொமாண்டர் பண்­டார ஆகி­யோரைத் தவிர வேறு எவ­ருக்கும் தெரி­யாது என கடற்­ப­டையின் கிழக்கு பிராந்­திய கட்­டளைத் தள­பதி ரியர் அத்­மிரால் ரி.ஜே.எல். சின்­னையா குற்றப் புல­ன­யவுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் வழங்­கி­யுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்ப்ட்டு காணாமல் போகச் செய்­யப்ப்ட்ட சம்ப்வம் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவு முன்­னெ­டுக்கும் சிறப்பு விசா­ர­ணை­களில் அவர் இவ்­வாறு தெரி­வித்­த­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு சிறப்பு அறிக்கை ஊடாக நேற்று அறி­வித்­தது.
மேலும் இந்த கடத்தல், காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள கடற்­படை முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க உள்­ளிட்ட 7 பேரில் விளக்­க­ம­றி­யலில் இருந்­து­வரும் அறு­வரின் விளக்­க­ம­றியல் காலத்தை எதிர்­வரும் 10 ஆம் திக­தி­வரை கோட்டை நீதி­மன்றம் நீடித்­தது.
அத்­துடன் கைது செய்­வ­தற்­காக தேடப்­பட்­டு­வரும் கடற்­படை லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்­சியைக் கைது செய்ய மீளவும் உத்­த­ர­விட்ட நீதி­மன்றம் பிடி­யாணை உத்­த­ரவை அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் வழங்­கு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யது.
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்ப்ட்ட சம்­பவம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜ­ய­ரத்ன முன்­னி­லையில் மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது.
முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­கப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது.
புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.
கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­ன­ய­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னா­யவுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமான்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமாண்­ட­ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிரி மற்றும் சிரப்பு புல­ன­யவுப் பிரிவின் பணிப்­பா­ள­ரா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் அப்­போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸ­நா­யக்க ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இவர்­களில் சம்பத் முன­சிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்­றனர். நேற்­றைய விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது சந்­தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் 7 ஆவது சந்­தேக நப­ரான டி.கே.பி. தச­நா­யக்க மட்டும் மன்றில் ஆஜ­ராகி இருக்­க­வில்லை. அவர் வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிறைக்­கா­வ­லர்­களின் பாது­காப்பின் கீழ் சிகிச்சைப் பெறு­வ­தாக இதன் போது சிறை அதி­கா­ரி­களால் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
சந்­தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­னவின் கீழ் சட்­டத்­த­ர­ணிகள் குழு மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த நிலையில், குற்றப் புல­னா­யவுப் பிரிவின் சார்பில் பிர­தான விசா­ரணை அதி­காரி யாழ். மாணவி வித்­தியா கொலை வழக்கில் சாட்­சியம் வழங்க சென்­றி­ருந்த நிலையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க, உப பொலிஸ் பரி­சோ­தகர் உபாலி, உப பொலிஸ் பரி­சோ­தகர் பீ.எச். உபாலி, ஆகியோர் மன்றில் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் ஆஜ­ரா­கினர்.
பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன மன்றில் பிர­சன்­ன­மானார். இதன்­போது மன்றில் சிறப்பு அறிக்­கையை சமர்­பித்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்தார்.
' கனம் நீதிவான் அவர்­களே, கடந்த தவ­ணையின் போது 2ஆம், 3 ஆம் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக கப்பம் கோரி­யமை தொடர்பில் சாட்­சிகள் உள்­ளதா என வின­வப்­பட்­டது. இது­வ­ரை­யி­லான விசா­ர­ணையில் அவ்­வா­றான சாட்­சிகள் இல்லை. எனினும் அவர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.
பந்து குமார என்­பவர் தன்­னிடம் கப்பம் கோரி­ய­தாக ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் பாதிக்­கப்ப்ட்ட தரப்பு தாய் ஒருவர் தெரி­வித்த விவ­காரம் தொடர்பில் நாம் அவ­ரிடம் வாக்கு மூலம் பெற்றோம். இதன் போது பந்து குமா­ரவின் பெயரை தான் தவ­று­த­லாக தெரி­வித்­த­தாக அவர் தெரி­வித்தார்.
3, 4 ஆம் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான எதிர்­கால விசா­ர­ணைகள் தொடர்பில் கடந்த தவணை கேள்வி எழுப்­பட்­டது. அவர்­க­ளுக்கு எதி­ராக மட்­டு­மன்றி அனைத்து சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரா­கவும் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.
இது­வரை வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடந்த தவணை விசா­ர­ணையின் பின்னர் நாம் பதிவு செய்த முக்­கிய வாக்கு மூலம் ஒன்­றூ­டாக சில விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. கடற்­ப­டையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ன்ட அதி­கா­ரி­யான ரியர் அத்­மிரால் ரீ.ஜே.எல். சின்­னை­யா­விடம் நாம் வாககு மூலம் பெற்றோம். இதன் போது அவர் முக்­கிய சில தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.
குறிப்­பாக சந்­தேக நபர்கள் தடுத்து வைக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­படும் திரு­ம­லையில் உள்ள கன்சைட் முகாமின் 1,2 ஆம் இலக்க சிறைக் கூடங்­களில் என்ன நடக்­கி­றது என்­பது முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொட, டி.கே.பி. தஸ­நா­யக்க, லெப்­டினன் கொமாண்டர் ரண­சிங்க, லெப்­டினன் கொமான்டர் பண்­டார ஆகி­யோரே அறிந்­தி­ருந்­தனர். வேறு எவ­ருக்கும் அங்கு என்ன நடக்­கி­றது என்­பது தெரி­யாது என அவர் வககு மூலத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.
அதே நேரம் கைது செய்ய தேடப்­பட்டு வரும் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியை கைது செய்ய நாம் பல விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். தற்­போது அவ­ரது நண்­பர்கள், உர­வி­னர்கள் மீது எமது அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. யாரேனும் அவ­ருக்கு அடைக்­கலம் கொடுத்­துள்­ள­னரா என ஆராய்ந்து வரு­கின்றோம்.
இந்த விட­யத்தில் இன்னும் யாரெல்லாம் கைது செய்­யப்­பட போகி­றார்கள் என்­பதை பிர­தான விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வா­வுக்கே தெரியும். எனவே அவர் மன்றில் ஆஜ­ராகி அது தொடர்பில் அடுத்த தவணை அறி­விப்பார்' என பிர­தான பொலிச் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்க தெரி­வித்தார்.
இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்­களின் சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­த­னவும் மற்­றொ­ரு­வரும் மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்­தனர். குற்றப் புல­னா­யவுப் பிரிவு பக்கச் சார்­பாக நடந்­து­கொள்­வ­தா­கவும் உபுல் பண்­டார, பந்து குமார உபுல் சமிந்த ,காமினி. மென்டிஸ், வெல­கெ­தர உள்­ளிட்ட சிலர் இக்­க­டத்­த­லு­டனும் கப்பம் கோரிய சம்­பவம் தொடர்­பிலும் தொடர்­பு­பட்டு இருந்தும் அவர்­களை குற்றப் புல­னா­யவுப் பிரிவு கைது செய்­ய­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
எனினும் குற்றப் புல­னா­யவுப் பிரிவு பக்கச் சார்­பா­னது என்­பதை அதன் பொறுப்­ப­தி­காரி ரஞ்சித் முன­சிங்க மறுத்தார்.
சாட்­சி­களின் அடிப்­ப­டை­யி­லேயே கைதுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், விசா­ரணை நிறை­வ­டை­யாத நிலையில் மேலும் நபர்கள் இருப்பின் கைது செய்­யப்­ப­டுவர் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
விரி­வான விசா­ர­ணை­களை செய்து சந்­தேக நபர்கள் யாராக இருப்­பினும் அவர்­களைக் கைது செய்­யு­மாறு நீதிவான் லங்க ஜய­ரத்ன ும் அவர் சுட்டிக்காட்டினார்.
விரிவான விசாரணைகளை செய்து சந்தேக நபர்கள் யாராக இருப்பினும் அவர்களைக் கைதுப் செய்யுமாறு நீதிவான் லங்க ஜயரத்ன குற்றப் புலனயவுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து மன்றில் கருத்துக்களை முன்வைத்த சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, சந்தேக நபர்கள் தற்போது ஒவ்வொருவரின் பெயராக கூறுவதாகவும், அவர்கள் உண்மையில் குற்றத்துடன் தொடர்புபட்டிருப்பின் அதிகாரம் இருந்த போது அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தற்போது சந்தேக நபர்கள் சிக்குண்டுள்ள நிலையில் மூக்கு வரை நீர் மட்டம் வந்ததும் வேறு வழியின்றி ஒவ்வொருவரின் பெயரைக் கூறிவருவதாகவும் எவராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து அதுவரை தசநாயக்க உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியலை நீடித்தார்.
http://www.canadamirror.com/srilanka/04/134582

No comments:

Post a Comment