Saturday, August 5, 2017

களிமண்ணால் அணை கட்டிய தமிழன்! உலகமே வியக்கும் அதிசயம்

பொதுவாக நீரைத் தேக்கவும், நீரோட்டத்தைத் தடுக்கவும், திசை மாற்றவும் அணை கட்டப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
அவர்களின் துயரை துடைக்க கரிகால சோழன் காவிரி ஆற்றின் மீது அணைகட்ட முடிவெடுத்தார்.
உலகப் பழமை வாய்ந்த கல்லணை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.
காவிரியின் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்து சேர்கிறது.
இந்த கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என்று 4 வகை ஆறுகளாக பிரிக்கிறது.
சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்திய கரிகால மன்னன் இந்த கல்லணையை கட்டியவர் என்பதால், இவரை காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டு வந்தவன் எனும் பெருமைக்குரியவர்.
கல்லணை உருவானது எப்படி?
சோழர்கள் அடிக்கடி வெள்ளத்தால் அவதிப்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்க, காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர்.
ஆனால் அந்தப் பாறைகள் அனைத்தும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றது.
பின் பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக் கொள்ளும் விதமாகச் செய்து, இந்த களிமண் கல்லணையை கட்டி முடித்தனர்.
ஆனால் 2000 ஆண்டுகள் நெருங்கியும் இன்னும் வலிமையாக காணப்படும் இந்த கல்லணையின் தொழில்நுட்பம் மட்டும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
சிமெண்ட்டால் கட்டப்படும் பாலங்களின் ஆயுள் கூட 500 ஆண்டுகள் என்ற நிலையில், 2000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பலமுடன் இருப்பதே தமிழனின் அறிவுக்கு சான்றாகும்.
http://news.lankasri.com/travel/03/130111

No comments:

Post a Comment