Saturday, August 12, 2017

மொட்டை கடிதத்துக்கு பதிலாக வந்துள்ள சரஹா ஆப்ஸ்

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருப்பது ’சரஹா’, இது மெசன்ஜர் செயலியாகும்.
சரஹா-வின் சிறப்பு என்னவெனில் இதன் மூலம் யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும்.
மெசேஜ் செய்ய விரும்பும் நபருக்கு நாம் யாரென்று தெரியாமலே மெசேஜ் செய்யலாம்.
செய்திகள் பெறப்படும் நபரின் இன்பாக்சில் செய்திகள் மட்டும் வருமே தவிர அதை அனுப்பியது யார் என தெரியாது.
எகிப்து, சவுதி போன்ற அரேபிய நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமாக உள்ள இந்த செயலி இந்தியாவிலும் தற்போது பிரபலமடைய தொடங்கியுள்ளது.
பேஸ்புக், ஸ்னாப்சாட் மற்றும் டுவிட்டர் வழியாக சரஹா செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
https://www.sarahah.com என்ற இணையதளத்திற்கு சென்று இமெயில், பாஸ்வேர்டு, போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்வதன் மூலம் சரஹாவை பயன்படுத்த தொடங்கலாம்.
http://news.lankasri.com/apps/03/130542

No comments:

Post a Comment