Tuesday, August 1, 2017

பல்வலியை உடனே போக்கும் டிப்ஸ்: மிஸ் பண்ணிடாதீங்க

பற்களை சரியாக விளக்காமல் இருப்பது, தவறான பிரஷ்ஷிங் முறை, சர்க்கரை பொருட்களை அதிகம் சாப்பிடுவது இது போன்ற காரணத்தினால், பற்கள் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பல்வலியை குணமாக்க என்ன செய்ய வேண்டும்?
  • தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை கொண்டு வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இதனால் ஈறு வீக்கம், பாக்டீரியா தொற்று போன்றவை குணமாகும்.
  • 5 மிளகு மற்றும் 2 கிராம்பு எடுத்து அதை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது அதை பொடியாக்கி பாதிப்பு உள்ள இடத்தில் தடவலாம். இதனால் பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல், போன்றவை குணமாகும்.
  • கற்றாழையின் ஜெல்லை பற்களில் தடவி லேசான அழுத்தம் கொடுத்து வந்தால், அது பாக்டீரியா தொற்று ஏற்படுவதை தடுத்து, ஈறு வீக்கத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை கொண்டு வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.
  • இஞ்சியை அரைத்து அதனுடன் 2 பூண்டு பற்களை சேர்த்து நன்றாக பிசைந்து அதை பற்களில் தடவி வைத்து 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் பல்வலி உடனே குணமாகும்.
http://news.lankasri.com/medical/03/129800

No comments:

Post a Comment