Monday, July 24, 2017

மலச்சிக்கலை உடனே போக்க.. இந்த வழிகளை பின்பற்றுங்கள்

பல நோய்களை உண்டாக்க வழிவகுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை, உணவுப்பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் இது போன்ற வாழ்க்கைச்சூழல் பழக்கவழக்க முறையினால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட காரணமாகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்குவது எப்படி?
  • மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சிறிது ஆலிவ் ஆயிலை குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • மலச்சிக்கல் பிரச்சனையின் ஆரம்ப நிலையில், விளக்கெண்ணெய்யை குடித்து வந்தால், நாளடைவில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • இரவு உறங்கும் முன் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் மலச்சிக்கல் குணமாகும்.
  • உலர்ந்த அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் அந்த அத்திப்பழத்தையும், தண்ணீரையும் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • பேரிக்காயை நீர் விட்டு அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடித்து வந்தால், மலச்சிகல் குணமாகும்.
  • உலர் திராட்சைப் பழங்களை பாலில் காய்ச்சி, திராட்சையை சாப்பிட்டு விட்டு, பின் அந்த பாலை குடிக்க வேண்டும்.
  • முள்ளங்கி சாற்றை 50 மி.லி எடுத்து அதை தண்ணீரில் கலந்து 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.
  • தினசரி உணவில் அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, புளிச்சக்கீரை, முடக்கத்தான்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
  • மலச்சிக்கலை போக்கும் மாம்பழம், கொய்யா, பப்பாளி, திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
  • சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம், கறிவேப்பிலை, ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் வதக்கி பொடி செய்து, காலை உணவுடன் 1 டீஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.
  • கடுக்காயின் பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதிகாலையில் குடித்து வர வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்குவது எப்படி?
  • குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால், ஆளி விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி கொடுக்க வேண்டும்.
  • பெருஞ்சீரகத்தை கருக்காமல் வறுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால், உடனே குணமாகும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்க, உலர் திராட்சை பழத்தை பால் அல்லது நீரில் ஊறவைத்து, பின் அந்த பழத்தின் சாறு எடுத்து கொடுக்க வேண்டும்.
http://news.lankasri.com/health/03/129238

No comments:

Post a Comment