Thursday, July 27, 2017

பட்டுச் சேலை-இந்த விடயத்தை அப்படியே உங்க மனைவியிடம் சொல்லிப் பாருங்கள்,கொண்டாட்டம்தான்!

பட்டுச் சேலைகளை துவைக்கும் முறை என்பது எல்லாப் பெண்களுக்கும் தெரியாது. லாண்டரியில் போடவும் பயப்படுவார்கள்.
ஆனால் பட்டுப் புடவை என்பது பெண்களின் உணர்வுகளோடு கலந்திருக்கும் ஒரு விஷயம்.
இந்தப் பதிவை உங்கள் மனைவியிடம் சொல்லிப் பாருங்கள..! உங்களை கொஞ்சி மகிழ்வார்கள்.
* பட்டுச் சேலைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. அதேபோல், ஒவ்வொருமுறை உடுத்திய பிறகும் ட்ரை க்ளீனிங்குத் தான் போடவேண்டும் என்ற அவசியமும் இல்லை
*மிகவும் மென்மையான, உடலுக்கு உபயொகிக்கும் சோப்பையோ அல்லது மென்மையான துணி துவைக்கும் சோப்புத்தூளையோ பட்டுச் சேலையைத் துவைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
* சுடுநீரில் நனைக்கவோ அலசவோ கூடாது. குளிர்ந்த நீரைத்தான் பயன்படுத்தவேண்டும்.
* அதேபோல் பட்டு சேலையை ஊற வைத்து துவைக்ககூடாது. சோப்பை மிருதுவாகத் தடவி கைகளினால் மென்மையாகத் துவைக்கவேண்டும்.
* துவைக்கும்போது சேலையை சுழற்றுவதோ, இறுக்கிப் பிழிவதோ கூடாது.* ப்ரஷ் போட்டு பட்டு சேலையைத் துவைக்கக் கூடாது.
* துவைத்து அலசிய உடனேயே சேலையை நிழலில் காய வைத்துவிட வேண்டும். சேலையில் இருக்கும் நுரையை வெளியேற்ற இறுக்கிப் பிழியக் கூடாது.
* எப்போதும் மிதமான சூட்டில்தான் பட்டு சேலையை இஸ்திரி செய்யவேண்டும். அதேபோல் ஒவ்வொருமுறை இஸ்திரி போடும்பொழுதும் ஒரே மாதிரி மடிக்காமல் மடிப்பானது மாறி மாறி வருவதுபோல மடித்தோமானால், மடிப்புகளில் புடவை கிழிந்து போவது தவிர்க்கப்படும்.

http://www.manithan.com/women/04/133606

No comments:

Post a Comment